ஜும் ஆ தொழுகை ப‌ற்றி ம‌க்க‌ளிடையே பீதி நில‌வுகின்ற‌து. ப‌த‌ட்ட‌மான‌ இச்சூழ்நிலையில் அச்ச‌ம் ஏற்ப‌டுவ‌து இய‌ல்பு.


ஜும் ஆ தொழுகை ப‌ற்றி ம‌க்க‌ளிடையே பீதி நில‌வுகின்ற‌து. ப‌த‌ட்ட‌மான‌ இச்சூழ்நிலையில் அச்ச‌ம் ஏற்ப‌டுவ‌து இய‌ல்பு.

ஆனாலும் ந‌மது நாட்டின் பெரும்பாலான சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்க‌ள் வ‌ன்முறையை விரும்புவ‌தில்லை. அத‌னால் அவ‌ர்க‌ளால் ப‌ள்ளிக‌ளுக்கு தாக்குத‌ல் ந‌ட‌க்கும் என‌ கூற‌ முடியாது. அதே போல் ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌ சிற‌ந்த‌ த‌லைவ‌ர். 1983ம் ஆண்டு ஜே ஆர் போல் ந‌ட‌ந்து கொள்ப‌வ‌ர் அல்ல‌.  அர‌சு ஒத்துழைக்காம‌ல் எத்த‌கைய‌ வ‌ன்செய‌லையும் காடைய‌ர் மேற்கொள்ள‌ மாட்டார்க‌ள் என்ப‌தே உண்மை.

முஸ்லிம் ம‌த‌ விவ‌கார‌த்துக்கான‌ அமைச்ச‌ர் ஹ‌லீம் பாதுகாப்ப‌ற்ற‌ இட‌ங்க‌ளில் ஜும் ஆ தொழுகையை தொழ‌ வேண்டாம் என்றும் வீட்டில் லுஹ‌ர் தொழுகை தொழும்ப‌டி ஆலோச‌னை கூறியுள்ளார்.

ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா, ம‌ற்றும் உல‌மா க‌ட்சி குத்பாவை 15 நிமிட‌த்துள் வைக்கும்ப‌டி சொல்லியுள்ள‌ன‌.

அதே போல் ஊரில் உள்ள‌ ஒரே ப‌ள்ளியில் ஜும்ஆ தொழும்போது ச‌ன நெருக்க‌டியும் பிர‌ச்சினையை த‌ர‌லாம். இந்த‌ நிலையில் ஜும் ஆ ப‌ள்ளிக‌ள் என‌ அறிய‌ப்ப‌டாத‌ சிறிய‌ ப‌ள்ளிக‌ளிலும் ஜும் ஆ தொழ‌லாம்.  சுமார் 10 பேர் இருந்தால் போதும் ஜும்ஆ தொழ‌ முடியும்.

திடீரென‌ வ‌த‌ந்திக‌ள் ப‌ர‌வினால் அல்லோல‌ க‌ல்லோல‌ம் ஏற்ப‌ட‌லாம் என்ப‌த‌ற்கே இத்த‌கைய‌ அறிவுறுத்த‌ல்க‌ள்.

எது ம‌க்க‌ளுக்கு ச‌வுக‌ரிய‌மோ அத‌னை இந்த‌ ப‌த‌ட்ட‌ சூழ‌லில் ஏற்றுக்கொள்வோம். இறைவ‌ன் ந‌ம‌து உள்க‌ங்க‌ளைப்பார்ப்ப‌வ‌ன்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ம‌த‌னி
உல‌மா க‌ட்சி
ஜும் ஆ தொழுகை ப‌ற்றி ம‌க்க‌ளிடையே பீதி நில‌வுகின்ற‌து. ப‌த‌ட்ட‌மான‌ இச்சூழ்நிலையில் அச்ச‌ம் ஏற்ப‌டுவ‌து இய‌ல்பு. ஜும் ஆ தொழுகை ப‌ற்றி ம‌க்க‌ளிடையே பீதி நில‌வுகின்ற‌து. ப‌த‌ட்ட‌மான‌ இச்சூழ்நிலையில் அச்ச‌ம் ஏற்ப‌டுவ‌து இய‌ல்பு. Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.