மடவளை புட்போல் அகாடமி ( சிறந்த பிரஜையை உருவாக்கும் தூர நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்)


கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் மடவளையில் சிறந்த வீரர்களுடன்  சிறந்த பிரஜையை உருவாக்கல்
என்ற தூர நோக்குடன் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட கால்பந்து கழகத்திற்கு பயிற்றுவிப்பாளரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று(14-04-2019) மடவளை மதீனா மைதானத்தில் நடைபெற்றது அந்நிகழ்வை சிறப்பிக்க இலங்கை தேசிய கிரிகெட் அணியின் டெஸ்ட் வீரர் முஹம்மது சிராஸ் கலந்து சிறப்பித்தார் .


இக் கால்பந்து  கழகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட வீரர்கள் பதினேழு வயதுக்கு மற்றும் பதினைந்து வயதுக்கு கீழ் பட்ட வீரர்கள் விளையாடுகின்றனர் இதில் மடவளை மதீனா தேசிய பாடசாலை மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்களும்  பங்குகொள்கின்றனர்.


இக் கால்பந்து  கழகத்தை சட்ட்டத்தரணி பைசர் அலி, அல்ஹாஜ் ரிசார்ட் அல்ஹாஜ் நுஸ்றி, ஜனாப் சியாத், சாகிர், இக்ராம் மற்றும் நசீம் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் பிரபல வியாபாரியும் மடவளை மதீனாவின் பழைய மாணவருமான அல்ஹாஜ் கச்சி முகம்மது முஹம்மது மாகிர் (Smart நிறுவனத்தின் chairman) அவர்களின் வழி காட்டல் மற்றும் நிதி உதவியின் பிரகாரம் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்படுகின்றது.


இந் நிறுவனத்திகு chairman  அல்ஹாஜ் கச்சி முகம்மது முஹம்மது மாகிர் அவர்களும் மற்ற சகோதர்கள் அங்கத்தவர்களாகவும் காணப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு தேவையான சகல jersey, shorts and Stockings தற்போது மாகிர் அவர்களினால் order செய்யப்பட்ட நிலையில் அவரின் சொந்த செலவில்   இலங்கை தேசிய கால் பந்து கழகத்தில் வீரர் ஜனாப் இல்யாஸ் அவர்களையும் பயிற்றுவிப்பளராக அறிமுகம் செய்தார்.


பயிற்றுவிப்பாளர் இலங்கை தேசிய கால் பந்து கழகத்தில் தற்போது விளையாடுவதோடு முன்னால் Sri Lanka Army, Zahira College Colombo, Royal College Colombo என்பவற்றில்  பயிற்றுவிப்பளராக கடமையாற்றியவர். அத்துடன் தற்போது கொழும்பில் கால்  பந்து கழகத்தின் பயிற்றுவிப்பளராகவும் கடமையாற்றுகின்றார்.


அத்தோடு அங்கத்தவர்களால் (சட்டத்தரணி பைசர் அலி, அல்ஹாஜ் ரிசார்ட், அல்ஹாஜ் நுஸ்றி, ஜனாப் சியாத், சாகிர், இக்ராம் மற்றும் உக்குன்) பணரீதியாகவும் நேரத்தாலும் பல சேவைகள் வழங்கப்படுகின்றன.


இக்கழகம் சிறந்த நிலைமைக்கு முன்னேற உங்கள் சகலரினதும் துஆவும் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம்.






மடவளை புட்போல் அகாடமி ( சிறந்த பிரஜையை உருவாக்கும் தூர நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்) மடவளை புட்போல் அகாடமி ( சிறந்த பிரஜையை உருவாக்கும்  தூர நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்) Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.