ஆற்றில் குடும்பத்தாருடன் நீராட சென்ற சிறுமிகள் இருவர் பலி.


அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகும்புர சங்கிலி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் குடும்பத்தாருடன்
நீராட சென்ற சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (07) மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

14 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெட்டிஹேன, பொரமடல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இனேகா சஷினி மற்றும் திரோஷ ஜிமேஷிகா ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றில் குடும்பத்தாருடன் நீராட சென்ற சிறுமிகள் இருவர் பலி. ஆற்றில் குடும்பத்தாருடன் நீராட சென்ற சிறுமிகள் இருவர் பலி. Reviewed by Madawala News on April 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.