மரணத் தண்டனை வேண்டாம்... பல நாடுகள் இணைந்து வலியுறுத்தியது.


மரணத் தண்டனையை இரத்துச் செய்யுமாறு, ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மீண்டும்
இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சம்மேளனக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம்  இணக்கம் தெரிவித்துள்ளமைக்கு அமைய, மரணத் தண்டனை அமுலாக்கத்தை இரத்துச்செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ், ​ஜெர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா, நோர்வே, மற்றும் சுவிட்ஸலாந்தின் தூதுவராலயம், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றின் இணக்கத்துக்கு அமைய ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிரான கொள்கைக்கமைய, 43 வருடங்களின் பின்னர், இலங்கையில் மரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிகிகள் தெரிவித்துள்ளனர்.
மரணத் தண்டனை வேண்டாம்... பல நாடுகள் இணைந்து வலியுறுத்தியது. மரணத் தண்டனை வேண்டாம்... பல நாடுகள் இணைந்து வலியுறுத்தியது. Reviewed by Madawala News on April 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.