பிள்ளைகளை நெறிப்படுத்தாததன், பேராபத்து!


-எம்.எம்.ஏ.ஸமட்-
பொதுவாக குழந்தைகள் பிறந்து மெதுவாக வளரத் தொடங்கும்போது
அதனுடைய வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரதும் பொறுப்பாகும். பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் விடும் தவறுகள், கவனயீனங்கள் பொறுப்பற்ற பண்புகள் சமூகத்திற்கும் நாட்டுக்கும், பேராபத்து மிக்க பிள்ளைகள் உருவாக வழிகோலுகிறது.


சில பெற்றோரின் பிள்ளை வளர்ப்பிலுள்ள குறைபாடுகளும், சமூக முகவர்கள் விடுகி;ன்ற தவறுகளும் அல்லது அவர்களிள் வழிகாட்டல்களிலுள்ள பலவீனங்களும்;  ஆரோக்கியமற்ற, ஆபத்துமிக்க இளைஞர் சமூகம் ஒன்று உருவாக காரணமாவதுடன் அந்த இளைஞர் சமூகம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் ஈடு செய்ய முடியாத வடுக்கள் நிறைந்த வரலாற்றை உருவாக்குவதோடு அந்த இளைஞர் கூட்டம் சார்ந்த சமூகம் கறுப்புப்புள்ளிகளைச் சுமக்கவும் நேரிடச் செய்கிறது..


இவ்வாறான ஒரு இளைஞர் கூட்டத்தினால் அமைதிப் பூங்காவான இலங்கை இரத்த வெள்ளத்தில் நனைந்துள்ளது. பஞ்சிலம் பாலகர்கள முதல் முதியவர்கள் வரை பல நூறு அப்பாவிகள் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது தவிர காயப்பட்ட உள்ளுர்; வெளிநாட்டவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பல நூறு குடும்பங்கள் உறவுகளை இழந்து ஆழாத் துயரத்தில் துவண்டு போயிருக்கிறார்கள். மீள முடியாத வாழ்க்கைக் காயங்களோடு அவர்களது மணித்துளிகள் நகர்;ந்து கொண்டிருக்கிறது.


இதுபோக,  நாட்டுக்கு அவப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த நாடாக சர்வதேசத்தை பார்க்கச் செய்திருக்கிறது., தற்கால பொருளாதார பாதிப்புக்களையும் உண்டுபண்ணியுள்ளது இவை எல்லாவற்றுக்கும் மேலாக  அடையாளம் காணப்பட்டுள்ள மூளைச் சலவை செய்யப்பட்ட முஸ்லிம் பெயர் தாங்கியவர்கள் புரிந்த இக்;கொலை வெறி குண்டுத் தாக்குதல்களினால் அமைதியையும், சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும், மதித்து வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களினால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படவும், சோதனைகளுக்கு உட்படவும் அச்சம் கொள்ளவும் ஆழாக்கப்பட்டிருக்கிறது.


எந்தவொரு நபராலும், சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடூரத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இந்தக் கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டார் என்று சிந்திக்கவே முடியாதுள்ளது. ஆனால், ஒன்றை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும்.  அவர்களது வளர்ப்பிலும், வழிகாட்டல்களிலும் தவறுகள் விடப்பட்டிருக்கிறது. பிள்ளை வளர்ப்பிலுள்ள தவறுகளும், வழிகாட்டல்களிலுள்ள பலவீனமும்,  குறைபாடுகளும் அவர்களை வழிதவறிச் செல்லவும் தீவிரவாதிகளாக மாறவும் வழிகோலியிருக்கிறது.



குடும்ப, சமூகப்பொறுப்பு மற்றும் நாட்டுப் பற்றுடன் பிள்ளைகள் வளர்க்கப்படாது அல்லது நேரிய வழியில் அவர்கள்  வழிகாட்டப்படாது விடப்படுமிடத்து எண்ணம் போன போக்கியில்  வாழவும் அல்லது அவர்கள் வழி தவறியர்வகளின் வழியில் சிக்கி மூளைச் சலவை செய்யப்படவும்;  நேரிடும் என்பதை மறுக்க முடியாது.

எண்ணங்களின் தாக்கம்

மனித எண்ணங்களுக்கு மகத்தான சக்தியிருக்கிறது. எண்ணங்கள் நல்லவையாக இருப்பினும், தீயவையாக இருப்பினும்  அவை பெறுத்த மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன. மற்றவர்களைக் குறித்து நல்ல அபிப்பிராயங்ளை மற்றுமே வளர்த்துக்கொள்ளுங்கள் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒருவரைப் பற்றிய தீய அபிப்பிராயத்தைக் கூட மனத்தில் வளரவிடக் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. தீய நினைப்பு, பகைமை குரோதம் என்பன அமைதியைக் கெடுத்துவிடுகிறது.


வன்முறை எண்ணங்கள் மறைந்திருக்குமாயின் அதன் விளைச்சலைக் காட்டியே தீரும். யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கும் வன்முறை எண்ணம் கொண்டவர்களினால் புரியப்படுகின்ற இத்தகைய கொடூரத்தாக்குதல்களை இந்நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு சமூகமும் எதிர்பார்த்திருக்கவில்லை.


எவரும் எதிர்பார்க்காத இத்தாக்குதல்களை நடத்தியவர்களின் எண்ணங்களில் வன்முறை வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு குற்றச் செயல்களுக்கும் பல காரணங்கள் காணப்பட்டாலும் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஆரோக்கியமற்ற மாற்றங்கள், நடத்தைப் பிறழ்வுகள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்கிறது.  ஒருவரின் உள்ளம் பாதிக்கப்படுகின்றபோதுதான் அவரது நடத்தையிலும் செயலிலும் விரும்பத்தகாத மாற்றங்களைக் காண முடியுமென உளவியல் சுட்டிக்காட்டுகிறது. அந்தவகையில் இத்தாக்கதல்களில் ஈடுபட்டவர்கள் ஏதோவொரு வகையில் உளப்பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கவும் கூடும். இத்தாக்குதல்களை நடத்தியவர்களின் உள்ளங்களும் தீய எண்ணங்களினால் நிச்சயம் பாதிக்கப்பட்டிக்கக் கூடும்.



நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக, கலாசார மாற்றங்களினால் குறிப்பாக இளைஞர்கள் தமது பாரம்பரிய, சமூக, கலாசார பண்புகளை விட்டு தூரமாகச் செல்கின்றனர். இளம் சந்ததியினரின் மனப்பாங்கு, சிந்தனை, உடை, நடை, பாவனை என்பவற்றில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களினால் ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்குமிடையில் இடைவெளிகளும் முரண்பாடுகளும் உருவாகின்றன.  இவ்வாறான நிலைக்குக் காரணம் அவர்களுக்கான வழிகாட்டல்களின் பலவீனமாகும்.

பெற்றோரும் பிள்ளை வளர்ப்பும்


'ஒவ்வொரு பிள்iயும் பிறக்கும் போது நல்லவர்களாகவே பிறக்கின்றனர் அவர்கள் நல்வர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறுவது பெற்றோர்களின் வளர்ப்பில்' என்று சொல்லப்படவதில் ஆயிரம் உண்மைகள் புதைந்திருக்கிறது.



மேலத்தேய கலாசாரமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகம் தாக்கம் செலுத்தி வரும் இக்காலத்தில் வழி தவறிய போதனைகளினாலும,; செயற்பாடுகளினாலும் தனது வாழ்க்கையையும் தொலைத்து ஏனையவர்களின் வாழ்க்கைளையும் சூனிமாக்கும்  சதிகாரர்களின் வழிநடத்தலில் சிக்காமல் ஒவ்வொரு பிள்ளையும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் பிள்ளை வளர்ப்பிலும் நேரான வழிகாட்டல்களிலும் ஒவ்வொரு பெற்றோரும் அதிதி அக்கறை காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்


நல்ல துணி வகைகளை எடுத்து நன்றாக தைக்கத் தெரியாத தையற்காரரர் ஒருவரிடம் கொடுத்தால் நமது உடைக்கு என்னவாகும். தேவையான அனைத்துப் பொருட்கனையும் எடுத்து சமைக்கத் தெரியாத சமயல்காரரிடம் கொடுத்தால் அந்த உணவின் சுவை எப்படியிருக்கும். தோட்டக்கலை தெரியா ஒருவரிடம் இளம் பூச்செடிகளைக் வளர்க்கக் கொடுத்தால் அவைகளின் கதி என்னவாகும் அது போலவே பிள்ளைகளின் உடல், மன, அறிவு, ஆன்மீக, ஒழுக்க வளர்ச்சிப் பரிமாணங்கள் தொடர்பான அறிவைப் பெறாது அல்லது அவை தொடர்பில் அக்கறை கொள்ளப்படாது பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றபோது தையல் கலை தெரியாத தையல்காரரிடம் கொடுக்கப்பட்ட ஆடைக்கும், சமயல் கலை தெரியாத சமயற்காரரிடம் கொடுக்கப்பட்ட உணவுக்கும்  தோட்டக்கலை தெரியாத தோட்டக்காரரிடம் கொடுக்கப்ட்ட இளம் பூச்செடிகளுக்கும் என்ன கதி நடக்குமோ அவ்வாறுதான் தமது பிள்ளைகளுக்கும் நடக்கும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டியுள்ளது.



ஒரு பிள்ளையின் சிறப்பான வளர்;ச்சியில் சமூக முகவர்களான பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமவயதுக் குழுவினரும், சமய போதகர்களும் அதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும்;. சமூக முகவர்களின் வழிகாட்டல்கள் பலவீனமடைகின்றபோது, பிள்ளைகளின் பண்புசார் வளர்ப்பும், வளர்ச்சியும் திசைமாறும். இவ்வாறு திசைமாறும் இளைஞர் கூட்டம் புரிந்த செயலே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறிய மனிதபடுகொலைகளாகும். பிழையான வழிகாட்டல்கள், மூளைச் சலவைகள் என்பவற்றில் சிக்கிக் கொள்கின்ற இளைஞர் குழுவின் கொடூரமான மன வக்கீரத்தின் வெளிப்பாட்டினால் முழு நாடே அமைதி இழந்திருக்கிறது.



பணத்தையும், செல்வத்தையும் தேடிப் பெறுவதற்காக கால நேரத்தை செலவிடும் பெற்றோர் தமது பிள்ளைகள் எவருடம் பழகுகிறார்கள், அவர்கள் எந்தக் குழுக்களுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள், எங்குபோகிறார்கள். எத்தனை மணி;க்கு வீட்டுக்கு வருகிறார்கள் என்பதில் அக்கறை கொள்வது அவசியமாகும். அவ்வாறுதான் வீடடையும் நாட்டையும் விட்டு அல்லது நாட்டுக்குள் கல்வி மற்றும் தொழில் நிமித்தம் சென்றுள்ள வளர்ந்த பிள்ளைகள் தொடர்பில் பெற்றோரும் உற்றாரும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பிலும் தொடர்புக்கள் தொடர்பிலும் அக்கறை கொள்வது அவசியமாகும்.


ஏனெனில், இளம் சமுதாயத்தினர்களில் பலர் மனம்போன போக்கில் வாழ்க்கை அனுபவிக்க முற்படுவதன் விளைவு பல்வேறு வேண்டத்தகாத தொடர்புகளையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்க வழிநிற்கிறது. அதனால், பிள்ளைகளின் வாழ்க்கையை, சமூகத்தை, சூழலை, நாட்டைப் பாதிக்கும் விடயங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சுய அக்கறை மற்றும் சுயபாதுகாப்;பு தொடர்பிலும் அறிவிறுத்தப்பட வேண்டியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு முஸ்லிம் பெற்றோரும் தம்முடைய பிள்ளைகள் கருணை உள்ளவர்களாக, மரியாதை செலுத்தக் கூடியவர்களாக, சமூக, நாட்டுப்பட்டுள்ளவர்களாக, மற்றவர்களுக்கு உதாரணமானவர்களாக மாற,மாற்றுவதை இலக்காகக் கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்க, வழிகாட்ட நமது நேரத்தயும் காலத்ததையும் பயன்படுத்துகின்றபோதுதான் பேராபத்துமிக்கவர்களாக அன்றி நல்லவர்களாக நாட்டுப்பற்றுள்ளவர்களாக நமது பிள்ளைகளை உருவாக்க முடியும்.
பேராபத்துக்களின் தவிர்ப்பும் பலமான வழிகாட்டலும்
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், கொடூரத்தாக்குதல்களும் இடம்பெற்றுவிட்டது.



அதில் பங்காளர்களாக பல முஸ்லிம் இளைஞர்கள். அறியாமல் புரியப்படுகின்ற தவறுகள் ஒருபுறமிருக்க பிழையான வழிகாட்டுதல்கள் மற்றும் மூளைச் சலவைகள் என்பவற்றினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் ஏற்படுத்தியிருக்கும் விளைவுளை இன்று ஒவ்வொரு முஸ்லிமும் அனுபவிக்க வேண்டியுள்ளது. பாதையில் நடப்பது முதல் வாகனத்தில் பயணம் செய்வது வரை  ஒவ்வொரு இலங்கையரையும் அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. அதிலும் முஸ்லிம் சமூகம் அதிகளவு அச்சம் கொண்டவர்களாக இந்நாட்களைக் கடத்திற்கொண்டிருக்கிறார்கள்.


எதிர்கால முஸ்லிம்களின் வாழ்வியல் எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்வி ஒவ்வொருவரது உள்ளத்தையும் குத்திக்கொண்டிருக்கிறது  பாடசாலைகள்; முதல் பள்ளிவசால்கள் வரை வழங்கப்படுகின்ற வழிகாட்டல்கள் பலமானவையல்ல. சமுhதயத்திருத்தம் முதல் பள்ளிக்கூடமான வீடுகளில் உருவாக வேண்டும்.


ஆனால், தற்கால வீடுகள் அவற்றை வழங்கவில்லை. பாடசாலைகள் வழிகாட்டல்களை முறையாக முன்னெடுக்க வில்லை.

பள்ளிவாசல்களினுடான போதனைகளும் சமுதாய சீர்திருத்திற்காக பலமடையவில்லை. என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதனால்,  பல்வேறுமட்டங்களிலும் வழங்கப்படுகின்ற வழிகாட்டலிலும் விழிப்புணர்விலும் ஏற்படுகின்ற பலவீனங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதே தற்போதுள்ள முக்கிய பொறுப்பாகும்.


நடந்தேறிய தாக்குதல்கள் சம்பவங்களிலும் கடந்த காலங்களில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வுகளிலும் அதிகளவில் தொடர்புபட்டவர்களாக காணப்படுகின்றவர்கள் இளைஞர்களாவர்;. இப்பருவத்தினர் மத்தியில் அவரவர் சமூகத்திற்கான கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் புறக்கணிக்கப்பட்டு, ஒழுக்க நெறிகள் ஓதுக்கி வைக்கப்பட்டு எப்படியும் வாழலாம் எதையும் பின்னபற்றலாம் என்ற மனப்பாங்கில் வாழ்க்கைப் பயணத்தை அமைத்து வாழும் நிலை உருவாகியுள்ளது.



இவற்றின் பின்னணியை உளவியல் கண்ணோட்டத்தில்; நோக்குகின்றபோது, குழந்தை வளர்ப்பில் விடப்படுகின்ற தவறுகளும் பிரதான சமூக முகவர்களாகக் கருதப்படும் பெற்றோர்களினாலும் ஆசிரியர்களினாலும் வழங்கப்படுகின்ற வழிகாட்டல் ஆலோசனைகளில்; காணப்படுகின்ற பலவீனங்களும் தாக்கம் செலுத்துவதைச்; சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
ஒரு சமூகம் அரசியல,; சமூக, பொருளாதார ரீதியில்  ஆரோக்கியமான வளர்ச்சியை  அடைய வேண்டுமாயின், அச்சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டல்கள் இருப்பது இன்றியமையாதது. வழிகாட்டிகள் என சமூகம் நம்புகின்றவர்;களின் ஆரோக்கியமற்ற, பொடுபோக்கான செயற்பாடுகள் அல்லது வழிகாட்டல்கள்   அச்சமூகத்தை வீழ்ச்சிப் பாதையில் நகர்த்துவதுடன் அச்சமூகத்தின் இருப்பு முதல் அத்தனையையும் கேள்விக்குறியாக்கும்;. 


இவ்வாறுதான், ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும்,  அக்குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கும், பாதுகாப்புக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் முறையான வழிகாட்டல்கள் அவசியம். அக்குடும்பத்தின் வழிகாட்டிகளான பெற்றோர்கள் அல்லது பாதுகாவளர்களின் வழிகாட்டல்; பலவீனமடைகின்றபோது, பிள்ளைகளின் நடத்தை உட்பட அத்தனை செயற்பாடுகளும் ஆரோக்கிமற்றதாக அமைந்து விடுகின்றன. அவ்வாறே, பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆரோக்கியமான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதும் முக்கியமாகும்.


வீடு, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகச் சூழல்கள் ஆரோக்கியமாக்கப்பட வேண்டுமாயின் பெற்றோர்களும், ஆசிர்களும், விரிரையாளர்களும் ஆரோக்கியமான வழிகாட்டல்களுக்கு முதலில் உட்படுத்தப்படுவது அவசியமாகும். ஒரு பிள்ளை வீட்டுச் சூழலில் சிறப்பான முறையில் வளர வேண்டுமாயின் அப்பிள்ளைக்கு சிறந்த வழிகாட்டல்கள் அவசியம். அந்த வழிகாட்டல்களை வழங்க வேண்டியபொறுப்பு பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைச் சார்ந்தது.


ஆரோக்கியமற்ற வழிகாட்டல்களை பிள்ளைக்கு வழங்கிவிட்டு அல்லது ஆரோக்கியமற்ற சூழலில் பிள்ளையை வளரச் செய்துவிட்டு, அப்பிள்ளையின் நடத்தை மற்றும் மனவெழுச்சியில்; ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது. அவ்வாறுதான் பாடசாலையிலும் வழங்கப்படுகின்ற வழிகாட்டல் ஆலோசனைகள் பலமிழந்து காணப்படுமாயின் அவர்களின் செயற்பாடுகளும் சிறந்த முறையில் அமையாது.


வழிகாட்டல்கள் பலவீனமடைகின்றபோது பிள்ளைகள் வழிதவறுவதையும் பரிதாப உயிர் இழப்புக்களைச் சந்திப்பதையும் தவிர்க்க முடியாது. ஆதலால், ஒரு பிள்ளையின்  சமூக முகவர்களான பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டல் ஆலோசனகளை வழங்குவதில் அக்கறை செலுத்த வேண்டுமென்வதுடன் பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டல் ஆலோசனை நடவடிக்கைள் சக்திமிக்கதாக்கப்பட வேண்டும்.
எனவே வீட்டுச் சூழலிலும், பாடசாலையிலும் பலவீனமடைந்துள்ள வழிகாட்டல் ஆலோசனை நடவடிக்கைகள் இவ்விரு சமூக முகவர் நிலையங்களிலும், மத வழபாட்டுத் தளங்களிலும் பலமிக்கதாக மேற்கொள்ளப்படுவது காலத்தின் அவசியமாகும். இதன்மூலமாக சமூக விழுமியங்களயும்  ஒழுக்க நெறிகளையும் பின்பற்றுகின்ற, கட்டுக்கோப்புக்குள் வாழுகின்ற எதிர்கால ஆரோக்கியமான நாகரீமிக்க சமூகமொன்றை கட்யெழுப்ப முடியுமென்பதுடன் வழிவதறியவர்களின் வழிகாட்டல்களுக்கும், மூளைச்சலவைகளுக்கும் உட்படாமல் பிள்ளைகளும், வளர்ந்தவர்களும் பாதுகாக்கப்படுவதுடன் குடுமு;பமும், சமூகமும், நாடும் பேராபத்துக்களிலிருந்தும் பாதுகாக்கப்படும்..

-எம்.எம்.ஏ.ஸமட்-
 விடிவெள்ளி – 25.04.2019

பிள்ளைகளை நெறிப்படுத்தாததன், பேராபத்து! பிள்ளைகளை நெறிப்படுத்தாததன், பேராபத்து! Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.