பற்றி எரிந்து சாம்பலான சொகுசு பஸ் .


தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் திகம்பதன பிரதேசத்தில் வைத்து இன்று (08) அதிகாலை,
சொகுசு பஸ்ஸொன்று முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பஸ், குருநாகலிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணஞ்செய்த வேளையிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸில் ஏற்பட்டிருக்கும் இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாமெனத் தெரிவித்தப் பொலிஸார், தீ விபத்து நேர்ந்த வேளையில் குறித்த பஸ்ஸில், சாரதி மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.
பற்றி எரிந்து சாம்பலான சொகுசு பஸ் . பற்றி எரிந்து சாம்பலான சொகுசு  பஸ் . Reviewed by Madawala News on April 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.