இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் ? ரணில் & கோ மந்திராலோசனை !அடுத்துவரும் நாட்களில் அதிரடி அரசியல் முடிவுகளை ஜனாதிபதி மைத்ரி எடுக்கலாமென
தகவல்கள் பேசப்படும் நிலையில் பிரதமர் ரணில் தனது கட்சியின் சகாக்களுடன் முக்கிய மந்திராலோசனைகளை நடத்தி வருகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களையும் -இணைத்து புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மைத்ரி தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் ரணிலின் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கப் போய் இறுதியில் நீதிமன்றத்தின் தலையீட்டினால் பாடம் ஒன்றை கற்ற மைத்ரி மீண்டும் அரசியல் பாடம் ஒன்றை கற்கத் தயாராகட்டுமென இந்த ஆலோசனைகளில் ரணில் தெரிவித்திருப்பதாக அறிய முடிந்தது.
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் ? ரணில் & கோ மந்திராலோசனை ! இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் ? ரணில் & கோ  மந்திராலோசனை ! Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5