‘அரசாங்கத் தரப்பில் குறைபாடுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம்’ - Madawala News Number 1 Tamil website from Srilanka

‘அரசாங்கத் தரப்பில் குறைபாடுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம்’தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில், வெளிப்படையான முறையில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டாலும் அரசாங்கத் தர​ப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும், விசாரணைகளின் பின்னர் அது தொடர்பானத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


நேற்று வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு- கட்டுவாபிட்டிய ஆகிய தேவாலயங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘அரசாங்கத் தரப்பில் குறைபாடுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம்’ ‘அரசாங்கத் தரப்பில் குறைபாடுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம்’ Reviewed by Madawala News on April 22, 2019 Rating: 5