இன்று கைது செய்யப்பட்ட பைஸருக்கு எதிராக கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு !!



இன்று கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானின் சகா பைஸருக்கு எதிராக கொலை மற்றும் கொலை
முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பைஸர் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த இரண்டு துப்பாக்கி சூடு சம்பவங்களில் பைஸருக்கு எதிராக நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்து இருந்தது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மொஹமட் பைஸர் தற்போது பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று கைது செய்யப்பட்ட பைஸருக்கு எதிராக கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு !! இன்று கைது செய்யப்பட்ட பைஸருக்கு எதிராக கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு !! Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.