ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு தேசிய சோபிஸ்ட் ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு.


சிங்கள-தமிழ்-முஸ்லிம் அனைத்து ஆசிரியர்களும் நல்லுறவினைப் பேணும் வகையிலும்  2019ம் ஆண்டின்
சிங்கள- தமிழ் புத்தாண்டு விடுமுறையை ஏதோவொருவகையில் கொண்டாடும் வண்ணம் முஸ்லிம் பாடசாலை தொடங்கவிருந்த 17 (புதன்) திகதியை 22 (திங்கள்) திகதிக்கு மாற்றியதனை இட்டு தேசிய சோபிஸ்ட் ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

எந்த ஆண்டிலும் இல்லாத வண்ணம் இவ்வாண்டு  முஸ்லிம் பாடசாலைகளின் முதலாந்தவணை விடுமுறை இரண்டு நாட்கள் மாத்திரமே இருந்தமையானது ஆசிரியர்களுக்கு பல அசெளகரியங்களை ஏற்படுத்தி இருந்தது.

அசெளகரியத்தினை நிவர்த்திசெய்து தந்தமையை இட்டு தேசிய சோபிஸ்ட் ஆசிரியர் சங்கம் ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

ஒரே நாடு- ஒரே பாடசாலை- ஒரே விடுமுறை.

ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு தேசிய சோபிஸ்ட் ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு. ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு தேசிய சோபிஸ்ட் ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு. Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5