பொது இடங்களில் முகத்தை மூடவேண்டாம் – முஸ்லிம் பெண்களிடம் உலமா சபை வேண்டுகோள்..



பொது இடங்களில் பயணிக்கும் போது முகத்தை மூடும் வண்ணம் அணியப்படும் புர்கா மற்றும்
நிகாப் ஆகிய ஆடையை அணிய வேண்டாம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

21ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை அடுத்து நாட்டில் ஏற்பட்டிருக்கும் அச்சமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் நடந்துகொள்ளவேண்டும் எனவும் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை எப்போதும் உங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டையை உங்களுடன் வைத்திருக்குமாறும் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது. 
பொது இடங்களில் முகத்தை மூடவேண்டாம் – முஸ்லிம் பெண்களிடம் உலமா சபை வேண்டுகோள்.. பொது இடங்களில் முகத்தை மூடவேண்டாம் – முஸ்லிம் பெண்களிடம் உலமா சபை வேண்டுகோள்.. Reviewed by Madawala News on April 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.