மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் ; பிரதான சந்தேக நபர்கள் தொடர்ந்து தலைமறைவு



மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான இப்ராஹிம்
மௌலவியின் இரண்டு புதல்வர்களிம்  தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த சம்பவத்துடன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ள  நிலையில் அவர்கள் வெளிநாட்டிக்கு தப்பி சென்றிருக்காலாம் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள வாலிபர்கள் மீது பல்வேறு இடங்களில் சேதமாக்கப்பட்ட பௌத்த, இந்து , கிரிஸ்தவ மத சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபர்களை கைது செய்யும் வரை பிணை மறுக்கப்பட்டு வரும் வாலிபர்கள் பிணையில் விடுவிக்க ஐக்கிய சமாதான முன்னணி தலைவர் மிப்லால் மவ்ளவி உள்ளிட்ட சிலர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

மாவனல்லை சம்பவத்தில்  செய்யப்பட்ட வாலிபர்களின் பெற்றோர்கள் மிப்லாள் மௌலவி தலைமையில்  மேல் மாகாண ஆளுனர் ஆஸாத் சாலி மற்றும் அமைச்சர் ஹலீம் , முஜிபுர் ரஹ்மான் , சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் ; பிரதான சந்தேக நபர்கள் தொடர்ந்து தலைமறைவு மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் ; பிரதான சந்தேக நபர்கள் தொடர்ந்து தலைமறைவு Reviewed by Madawala News on April 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.