வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் - புல்மோட்டை பிரதேசத்திலுள்ள காணிகளை புனித பூமி திட்டத்தின் கீழ் அளவிட முயற்சி



எம்.ரீ. ஹைதர் அலி
திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டை பிரதேசத்திலுள்ள எமது மக்களின்
காணிகளை உள்ளடக்கி கீழ் வரும் பிரதேசங்கள்

01. சாந்திபுர விகாரை
02. கந்தசாமி மலை, தென்னைமறவாடி
03. நாகலென விகாரை
04. அரிசிமலை
05. யான் ஓயா
06. அத்தனாசி
07. மிஹிந்து லேன்
08. சப்த நாக பம்ப
09. மீ சத்தர்ம பிதஹி

போன்ற 09 விகாரைகளுக்கான இடங்களை 2013ஆம் ஆண்டு அளவிட உத்தரவிடப்பட்டும் அளவிடப்படவில்லை என்றும் நிள அளவை திணைக்களம் இழுத்தடிப்பதாகவும் புல்மோட்டை பௌத்த பிக்கு சில பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களூடாக பாராளுமன்ற விசேட கமிட்டியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சபாநாயகர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ஏலவே இது விடயமாக கருவின் தலைமையில் JVP பாராளுமன்ற உறுப்பினர்கள் புல்மோட்டை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு அவர்களாலே பாராளுமன்ற குழுவிற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

அதனடிப்படையில் 17.04.2019 காலை 10.30 மணியளவில் இன்று புல்மோட்டை பகுதிக்குள் பிக்குவின் தலைமையில் நிள அளவை அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் குறித்த பகுதிகளை இனம் கண்டு அறிக்கை சமர்பிப்பதற்காக வருகை தந்துள்ளனர். 

இது விடயமாக ஏலவே புனித பூமிக்காக அளவிட முற்பட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அரிசிமலை தொடர்பாக திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் பிரதேச மக்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்த நிலையில் எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ள நிலையில் 07 வழக்காளிகள் பக்கம் தீர்ப்பு கிடைக்கக் கூடியதாக  உள்ளது. இந்நிலையில் குறித்த இன்றைய வருகை எந்த வகையில் நியாயமானது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் இது விடயமாக எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களுக்கும் எடுத்து சொல்லப்பட்டு அவற்றுக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.

குறித்த காணி பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோரின் வேண்டுகோளுக்கமைவாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் காணி அமைச்சர் கயந்த கருணா திலக, திருமலை மாவட்ட அரசாங்க அதிபர், காணி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் இது வியடமாக கவனம் செலுத்தப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது. 

பௌத்த விகாரைக்கான காணியை அளவிடுவதில் எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை மாறாக பொதுமக்களின் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அளவிடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்தார். 

மேலும் இந்த விடயத்தில் அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இன்றைய புல்மோட்டை காணி விடயமாக தகவல் அறிந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை அவரது அமைச்சில் இன்று புதன்கிழமை பி.ப.1.00 மணியளவில் அவசரமாக சந்தித்து நிலைமைகளை விளக்கினார். 

பின்னர் உடனடி நடவடிக்கையாக தொலைபேசியில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர் உண்மை தன்மையை அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினார். 

இது விடயமாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களுக்கும் தொலைபேசி மூலம் உரிய ஏற்பாடுகளை செய்யும்படி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் - புல்மோட்டை பிரதேசத்திலுள்ள காணிகளை புனித பூமி திட்டத்தின் கீழ் அளவிட முயற்சி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் - புல்மோட்டை பிரதேசத்திலுள்ள காணிகளை புனித பூமி திட்டத்தின் கீழ் அளவிட முயற்சி Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.