“உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்”. கிண்ணியாவில் இரத்ததான முகாம் .


-ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலகத்தின், கிராம உத்தியோகத்தர்  நலன்காக்கும் சங்கத்தின் ஏற்பாட்டில்
கிண்ணியா பிரதேச செயலகத்தில்  (06) சனிக்கிழமை இரத்ததான நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.


குறித்த நிகழ்வானது   கிராம உத்தியோகத்தர் நலன்காக்கும் சங்கத்தினர் ஏற்பாட்டில்  கிண்ணியா தள வைத்திய சாலையின் பங்களிப்புடன்  நடைபெற்றது

இரத்ததான  முகாமானது சங்கம் உருவாக்கப்பட்ட தினத்தினை ஞாபகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் இதே தினத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர்  ஏ.டபிள்யூ.எம்.லாபிர் தெரிவித்தார்

“உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில், இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேலும்  தெரிவித்தார்

பலர் பங்கேற்று இரத்த தானங்களில் ஈடுபட்டார்கள். கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்தியரும் இரத்த வங்கி பிரிவின் அதிகாரியுமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்கள் விசேடமாக இரத்த முகாமின் போது கடமையில் ஈடுபட்டார்.

“உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்”. கிண்ணியாவில் இரத்ததான முகாம் . “உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்”. கிண்ணியாவில்   இரத்ததான முகாம் . Reviewed by Madawala News on April 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.