மாத்தளை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முகம்மத் வசீர் என்பவர் உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மாத்தளை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முகம்மத் வசீர் என்பவர் உயிரிழப்பு.


மாத்தளை கண்டி பிரதான வீதியில் ( உக்குவலைக்கும் – மாத்தலைக்கும் இடையில்)  இடம்பெற்ற வாகன
விபத்தில் ஒருவர் உயிரிழந்து மேலும் 03 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த கார்  ஒன்றும் எதிர் திசையில் பயணித்துள்ள முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.


சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த 03 பேர் படுகாயமடைந்து மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


முச்சக்கர வண்டியில் பயணித்த உக்குவலை பிரதேசத்தினை சேர்ந்த 61 வயதுடைய முகம்மத் வசீர் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவர் அக்குரணையை பிறப்பிடமாக கொண்டவர் , உக்குவள பரகஹவெல என்ற இடத்தில் வசித்து வந்தவர்.


சம்பவம் தொடர்பில் காரின்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முகம்மத் வசீர் என்பவர் உயிரிழப்பு. மாத்தளை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முகம்மத் வசீர் என்பவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5