மகள் மேற்கொண்ட தாக்குதலில் தாய் பலி.. தந்தை காயம்.


கஹவத்தை, மடலகம பிரதேசத்தில் யுவதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில்
தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், தந்தை காயமடைந்துள்ளார்.

தாய் மற்றும் தந்தை மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இருவரும் படுகாயமடைந்த நிலையில் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், யுவதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகள் மேற்கொண்ட தாக்குதலில் தாய் பலி.. தந்தை காயம். மகள்  மேற்கொண்ட தாக்குதலில் தாய் பலி.. தந்தை காயம். Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5