ஜம்மியத்துல் உலமா கல்விக்குழு வின் வழிகாட்டலில் "வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் விழிப்பூட்டலும்" நிகழ்ச்சி.

- நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்-
நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச்சங்கம் (NPWA) அகில இலங்கை
ஜம்மியத்துல் உலமாவின் கல்விக்குழு வின் (ACJU) வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட "வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும்  விழிப்பூட்டலும்" என்ற தொனிப்பொருளில் ஓர் கருத்தரங்கு  07/04/2019 அன்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது .

இன் நிகழ்ச்சியானது தேசிய தொழில் பயிலுனர், தொழில் வழிகாட்டல்  நிறுவனம், ஜனாதிபதி செயலகத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து தலையங்கத்தையும்  உள்ளடக்கியே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கருத்தரங்கில்,

உளவியல் தகுதி காணும் முறை,மாணவர்களின் தகமையை இனம் காணுதல், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில்துறைக்கான விழிப்பூட்டும் வழிகாட்டல், தொழில்நுட்பக் கல்வியும் அதற்கான நிறுவனங்களும்,உயர்தர கற்கை நெறிக்குரிய வகைகள் அதன் தெரிவுகள் போன்றவைகளை உள்ளடக்கியதே சிறப்பம்சங்களாகும்.

இக்கருத்தரங்கிற்கு நீர்கொழும்பு கல்வி வலையத்திற்குட்பட்ட பத்து பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பங்கு பெற்றியிருந்தனர்.


இந் நிகழ்வில் 115க்கும் மேற்பட்ட  மாணவர்கள்  கலந்து பயன் பெற்றது மட்டுமன்றி அத்துடன்  சமூகமளித்த சகலமாணவர்களுக்கும்  சான்றிதழ்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


ஜம்மியத்துல் உலமா கல்விக்குழு வின் வழிகாட்டலில் "வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் விழிப்பூட்டலும்" நிகழ்ச்சி.  ஜம்மியத்துல் உலமா கல்விக்குழு வின்  வழிகாட்டலில் "வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும்  விழிப்பூட்டலும்" நிகழ்ச்சி. Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.