( நேரடி வீடியோ) கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு.


பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள
765 கிலோ கிராமிற்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்கள் இன்று (01) முற்பகல் களனிய மகுறுவெலவில் அமைந்துள்ள சுரவீர களஞ்சிய வளாகத்தில் வைத்து அழித்தொழிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அதனை பார்வையிடுவதற்கு ஜனாதிபதியும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் இந்த நடவடிக்கைகளை பார்வையிட ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைமையில் சர்வதேச விதிமுறைகளுக்கமைவாக போதைப்பொருட்கள் அழித்தொழிக்கப்படவுள்ளது.

பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் பொதுமக்கள் இடையே தோற்றுவித்திருக்கும் சர்ச்சைகளுக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், கடந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி 926 கிலோ கிராம் கொகெயின் போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட போதைப் பொருட்களே அவ்வாறு அழிக்கப்பட்டது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பகிரங்கமாக அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
( நேரடி வீடியோ) கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு. ( நேரடி வீடியோ) கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்  பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு. Reviewed by Madawala News on April 01, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.