50 ரூபாய் முதலீடும் பலகோடி வருவாயும்..


இவ்வுலகில் மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும்,பலகோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரனாக
இருந்தாலும் அனைத்தையும் விட்டு விடை கொடுக்கும் ஒரு தருணம் நிச்சயிக்கப்பட்டதே, இது அனைவருக்குமான பொது விதியாகும்.


ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் உலகத்தில் உள்ள அனைத்தையும் வசப்படுத்தி கொடுத்தான்.இருப்பினும் அவர்கள் உலகுக்கு விடை கொடுக்கும் போது அவர் மாத்திரம் தான் சென்றார்.


அவரின் நல்லறங்களும் உயர் குணாதிசயங்களும் அல் குர்ஆனில் படிப்பினைக்காக  வைத்துள்ளான்.


ஆகவே நாம் சுமாராக ஒரு மனிதராக மாத்திரம் வாழ்வதை விட  தனக்கும் பிறருக்கும் பயனுள்ளவராக வாழக்கிடைக்குமாயின் அது மிகச்சிறந்த அந்தஸ்தாகும்.நபிகளார் ஒரு ஹதீஸில் குறிப்பிடும்போது.மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு பயனுள்ளவராவார்.(நூல்:அத்தபரானி).இஸ்லாம் ஒரு போதும் சுயநலத்தை விரும்பவில்லை.


அதை வன்மையாக கண்டிக்கிறது.ஒரு விசுவாசி பொது நலனில் அதிகம் அக்கரை செலுத்துவான்.இதன் போது அவனில் தேசம்,இனம்,குலம் என்பன தடையாக இருக்க மாட்டாது.இஸ்லாத்துக்கு மாற்றம் இல்லை எனும் போது அதில் முழுமூச்சாக அர்பணிப்புடன் செயலாற்றுவான்.மக்கத்து காபிர்கள் ஒரு நல்லறன்கள் மற்றும் உரிமைகள் பாதுக்காப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய  ஒரு"ஹில்ஃபுல் புலூல்" எனும் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்ட  போது நபிகளாரும் அதில் பங்களிப்பு செய்து அதில் திருப்தி கண்டதுடன் நபித்துவத்துக்கு பின்னும் அதை பற்றி புகழ்துரைத்தார்கள்.


சிறிய  விடயமாயினும் பிறருக்கு பயனுள்ளதாயின் அதை செய்யுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.ஒருவர் ஒரு மரத்தை நட்டி அதன் மூலம் ஒருவருக்கு பயனடைய செய்ய முடியுமாயின் அதுவும் மிகச்சிறந்த அம்சமாகும்.ஒருவருக்கு ஒரு நல்லுபதேசத்தின் மூலம் பயனடைய செய்ய முடியுமாயின் அதுவும் நல்லறனாகும்.நல்லறங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


முத்தை அழகை மிஞ்சிய அழகிய தீவில் வாழ்து கொண்டிருக்கும் நாம் எம்மனைவராலும் பல்வேறு முன்னேற்றகரமான அழகிய முன்னெடுப்புக்களை வெற்றி கொள்ளமுடியும்.இதற்கான தோவை பலமும்,ஒற்றுமையும்,ஒத்திழைப்பும் ஆகும்.இன்றைய  கால கட்டத்தில் உன்னதமான ஒரு செயற்திட்டம் புற்றுநோயை எதிர்த்து துணிச்சலுடன் வீரு நடை போடும் செயற்திட்டம்.


இதற்கு பின்னால் பல தியாகங்களும்,கண்ணீர் துளிகளும் விம்பங்களாய்  இருப்பதை அனைவரும் அறிவோம்.இவ்வாறான நோய்களின் காரணமாக கண்ணீரில் மூழ்கி யார் காப்பாற்றுவார்கள் என ஏங்கித்தவிக்கும் உள்ளங்கள் பல இலட்சம்.இருப்பினும் துரதிஷ்டவசம் அனைத்தையும் தாண்டிய பாரிய தொகை குறிக்கிட்டு பல உயிர்களை பறித்துச்செல்கிறது.


பல கோடி இலக்குகள் கணவாகவும்,இணைவுகள் விடைகொடுக்கும் பிரிவுகளாகவும் அமைகின்றன.அழகிய உள்ளங்களால் இதை தடுத்து நிறுத்த அல்லது அதன் தாக்கத்தை குறைக்க முடியும்.இச்செயற்திட்டத்தில் பங்கு கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு பயனுள்ளவாராக மாறவும் முடியும்.


பிற்காலத்தில் அதை நினைத்து அளவில்லா ஆனந்தமடையவும் முடியும்.அப்போது எம்மை அறியாது ஆனந்த கண்ணீர் துளிகளை கண்கள் முத்துக்களாய் கொட்டும்.


இஸ்லாம் நோயாளிகளின் விடயத்தில் அதிக  அக்கரை காட்டுகிறது.அவர்களின் துயரில் பங்கு கொள்வதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது.நோய் விசாரிப்பதை இஸ்லாம் சில  போது கட்டாயப்படுத்தியும் உள்ளது.நோயாளிகளுக்கு அல்லாஹ் பல்வேறு சலுகைகளையும் வழங்கியுள்ளான்.நோயாளியை தரிசிக்கும் போது அல்லாஹ்வின் அருளும் கிட்டுகிறது.பராஃ இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்.நபிகளார் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச்செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள்.ஜனாஸாவை பின் தொடரும் படியும்,நோயாளியைநலம் விசாரிக்கும் படியும்,விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் படியும்.


அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,செய்தசத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும்.ஸலாமுக்கு பதில்கூறும்படியும்.தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.எல்லாப் புகழும்இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.இறைவன்உங்களுக்கு கருணை காட்டுவானாக'என மறுமொழி கூறும்படியும்கட்டளையிட்டார்கள்.வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும்,அலங்காரப்பட்டையும் எகிப்திய பட்டையும்,தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களைதடைசெய்தார்கள்.(நூல் புகாரி,எண்.1239),நோய் விசாரித்தலில் இன பேதம் கிடையாது நபிகளார் யூதச்சிறுவன் நோயுற்ற போது அவனை சென்று சுகம் விசாரித்தார்கள்.



அவர்களை சென்று சந்தித்து வருவதற்கே இவ்வளவு பெரிய நன்மைகள் இருக்குமாயின் அவர்களுக்கு பயனுள்ள அம்சங்களை செய்வது அளப்பரிய நன்மையளிக்கும் சேவையாகும்.இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:


ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.அவனுக்கு அநீதியிழைக்கவும்மாட்டான்;அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும்மாட்டான்.தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின்தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான்.ஒரு முஸ்லிமின்ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின்துன்பங்களில்ஒரு துன்பத்தை நீக்குகிறான்.



ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.(நூல்.புகாரி,எண்.2442).துயரில் துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு விடுதலை அளிக்கும் விதமாக செய்யும் சேவைகளின் போது நிச்சயம் மறுமையில் ஏற்படும துயரிலிருந்து விடுதலை பெறமுடியும்.


மனிதன் இன்னொரு மனிதனுக்கு சாதாரனமாக செய்யும் சேவை கூட அளப்பரிய  நன்மை அளிக்க கூடியது.ஒரு ஹதீஸில் நபிகளார் குறிப்பிடும் போது"ஒருவர் அவரது வாகனத்தில் ஏறவும் அதிலிருந்து இறங்கவும் அதில் உள்ள சுமைகளை ஏற்றி விடவும்,அதிலிருந்து இறக்கிவிடவும்,உதவி புரிவதும் நல்லறனாகும் -ஸதகாவாகும்-(நூல்-முஸ்லிம்.1009).இதன்படி நோய் எனும் சுமைகளை சுமந்து தவிக்கும் நோயாளர்களுக்கு உதவி புரிவதும் தர்மத்தில் அடங்கும்.இன்னும் அல்லாஹ் குறிப்பிடும் "போது அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யுங்கள்;இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டுசெல்லாதீர்கள்;இன்னும்,நன்மை செய்யுங்கள்;நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான் (2:195).



இஸ்லாம் ஆரோக்கியமாக  வாழவும் நன்மையளிக்கும் நல்லறங்களில் செலவு செய்யும் படியும் தூண்டுகிறது.நல்லறங்களில் போட்டி போட்டுக்கொள்ளும் படியும் ஆசையூட்டுகிறது.நன்மையை நாடி விரையும் போது அனைத்தும் நன்மையாக  மாறிவிடும்.


இப்போதைய  காலவோட்டத்தில் நன்மைத்தட்டில் எடையை கணமாக்க வாய்ப்பளிக்கும் ஒரு திட்டம்(join us in the fight against cancer).இதில் ஒரு சிறிய மூலதனத்தை மதலிட்டு மறுமையில் பாரிய சொத்தின் உரிமையாளராக  மாறுவோம்.

ஆக்கம் அபூ உமர் அன்வார் (BA மதனி.)

50 ரூபாய் முதலீடும் பலகோடி வருவாயும்.. 50 ரூபாய் முதலீடும் பலகோடி வருவாயும்.. Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.