இது ஏழு அல்லது எட்டு வருட திட்டம். உயிரிழந்தவர்கள் போக இன்னும் 300 அல்லது 400 பேர் இருப்பார்கள்.


நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்
உடனடியாக திட்டமிடப்பட்ட  ஒன்று அல்லவெனவும்,  ஏழு அல்லது எட்டு வருட திட்டத்தின் வெளிப்பாடாகும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


இன்று (24) இடம்பெறும் விசேட பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.

முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்னவின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக தற்கொலை குண்டொன்றை கொண்டுவர  எல்.ரி.ரி.ஈ.யிற்கு 12 வருடங்கள் தேவைப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பயங்கரவாத அமைப்பில் உயிரிழந்த நான்கு ஐந்து பேர் மட்டுமல்ல இருக்கின்றனர்.  300 அல்லது 400 பேர் இருப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

எனவே, இருந்த சகல அரசாங்கங்களும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த தாக்குதல் தொடர்பில் எமது தவறுகளை சரிசெய்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். D C
இது ஏழு அல்லது எட்டு வருட திட்டம். உயிரிழந்தவர்கள் போக இன்னும் 300 அல்லது 400 பேர் இருப்பார்கள். இது ஏழு அல்லது எட்டு வருட திட்டம். உயிரிழந்தவர்கள் போக இன்னும்  300 அல்லது 400 பேர் இருப்பார்கள். Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.