அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வில்பத்து விவகார வழக்கு விசாரணை திகதி குறிக்கப்பட்டது.


வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான, விளத்திகுளம் காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு,
அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் , அதற்கு  எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும்  கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 28ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்தது.

சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்குவினால், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைக்கான நாள் குறிக்கப்பட்டது.

இந்த மனுவின் நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை தொடர்ந்து அழித்து கொண்டிருப்பதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வில்பத்து விவகார வழக்கு விசாரணை திகதி குறிக்கப்பட்டது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்டிருந்த வில்பத்து விவகார வழக்கு விசாரணை திகதி குறிக்கப்பட்டது. Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.