பெற்றோல் வரி பாய்ந்தது ! Wegon R காரின் விலை 4 லட்சத்தால் அதிகரித்தது..தற்போது இலங்கையில் அதிகமாக விற்பனையாகும் சுசுகி வெகன் ஆர் கார் ஒன்றின் விலை
சுமார் 4 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கம் புதிதாக வெகன் ஆர் மீது விதித்துள்ள பெற்றோல் வாகன வரி காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹைபிரிட் வகை வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பெற்றோல் வாகன வரி சலுகை வெகன் ஆர் கார்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் கடந்த வாரம் முதல் வெகன் ஆர் வாகனங்களையும் பெற்றோல் கார் ரகங்களுக்குள் சுங்க திணைக்களம் சேர்த்துள்ளதால் இந்த  பெற்றோல் வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் சீ 200 வகை வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள  அதே தொழில்நுட்பம் வெகன் ஆர் கார்களில் பயன் படுத்தப்பட்டுள்ளால்  வெகன் ஆரும் பெற்றோல் வாகனங்களாக கருதி பெற்றோல் வரி அறவிடுவதாக சுங்க திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது.
பெற்றோல் வரி பாய்ந்தது ! Wegon R காரின் விலை 4 லட்சத்தால் அதிகரித்தது.. பெற்றோல் வரி பாய்ந்தது ! Wegon R காரின்  விலை 4 லட்சத்தால் அதிகரித்தது.. Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.