நாங்கள் எந்தக் கட்சியுடனும் பேசத்தாயார் - எம்.எஸ்.உதுமாலெவ்வை அறிவிப்பு.(றியாத் ஏ.மஜீத்)
நாங்கள் யாருடனும், எந்தக் கட்சியுடனும் பேசத் தாயார். இன்றிலிருந்து நாங்கள் சுயாதீனமான குழுவாக
இயங்கவுள்ளோம் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸிலிருந்து நான் விலகியதைத் தொடர்ந்து என்னை நம்பி கட்சியின் ஏனைய பிரதேசங்களின் உயர்பீட உறுப்பினர்கள் அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், வட்டார குழு உறுப்பினர்கள் எல்லோரும் இன்று தேசிய காங்கிரஸிலிருந்து விலகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சி என்பது மார்க்கமல்ல, அது காலத்தின் தேவை என்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்வின் கொள்கையில் வளர்ந்த நாங்கள் அதனடிப்படையிலேயே இன்று கட்சி விலகியுள்ளோம் எனவும் உதுமாலெவ்வை தெரிவித்தார்.

அதாவுல்லாஹ் என்றால் உதுமாலெவ்வை, உதுமாலெவ்வை என்றால் அதாவுல்லாஹ் என்ற விசுவாசம் இன்று தடம் மாறியுள்ளது. புகைச்சலுக்குள் இருந்தாலும் எரிச்சலுக்குள் இருக்க முடியாமலே கட்சியிலிருந்து விலகினேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஏன் பாராளுமன்றத் தேர்தல் கூட வரவிருக்கின்றது. இந்நிலையில் நாங்கள் நிதானமாக எந்தக் கட்சியுடனும் பேசவுள்ளோம் எனவும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெவ்வை விலகியதைத் தொடர்ந்து கட்சியின் ஏனைய பிரதேசங்களின் உயர்பீட உறுப்பினர்கள் அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் எல்லோரும் தேசிய காங்கிரஸிலிருந்து விலகும் நிகழ்வு இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் முன்னாள் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி பஹீச், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.ஜௌபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாங்கள் எந்தக் கட்சியுடனும் பேசத்தாயார் - எம்.எஸ்.உதுமாலெவ்வை அறிவிப்பு. நாங்கள் எந்தக் கட்சியுடனும் பேசத்தாயார் - எம்.எஸ்.உதுமாலெவ்வை அறிவிப்பு. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.