புகையிரத்ததின் சில பெட்டிகள் தனியாக பிரிந்து சென்ற சம்பவம்.


கொழும்பு - ​கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த
அஞ்சல் புகையிரத்ததின்  சில பெட்டிகள் பெம்முல்ல பிரதேசத்தில் தனியாக பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இரவு 8 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த தொடருந்து அங்கு நிறுத்தப்பட்டதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் , இந்த சம்பவத்தில் அதில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

பிரிந்த பெட்டிகள் தொடருந்தில் இணைக்கப்பட்டதன் பின்னர் , அரை மணித்தியாலங்கள் தாமதமாக தொடருந்து பயணத்தை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத்ததின் சில பெட்டிகள் தனியாக பிரிந்து சென்ற சம்பவம். புகையிரத்ததின்  சில பெட்டிகள் தனியாக பிரிந்து சென்ற சம்பவம். Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.