கைது செய்யப்பட்ட 'கெவூமா' வுடன் சம்பந்தப்பட்ட துஷாரியை தேடும் போலீசார்.. உங்கள் உதவியை நாடுகின்றனர்.


கெவூமா என்ற போதைப்பொருள் வியாபாரி  அண்மையில், பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால்
கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருடன்    சம்பந்தப்பட்டிருக்கும் பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

துஷாரி என்று அழைக்கப்படும் மஹா உடுவகே தோன் நிரோஷா நில்மினி பெரேரா இந்த பெண் மொரட்டுவை கட்டுபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான 47 வயதான இந்த பெண்ணை பற்றிய தகவல்கள் கிடைத்தால், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் 071-8591589 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 'கெவூமா' வுடன் சம்பந்தப்பட்ட துஷாரியை தேடும் போலீசார்.. உங்கள் உதவியை நாடுகின்றனர். கைது செய்யப்பட்ட 'கெவூமா' வுடன் சம்பந்தப்பட்ட துஷாரியை தேடும் போலீசார்.. உங்கள் உதவியை நாடுகின்றனர். Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5