ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு.


பெலியத்த பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் துப்பாக்கிச் சூட்டுக்கு
இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீட்டில் விழுந்து கிடந்ததை கண்ட உறவினர் ஒருவர்  பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் விபரம்   இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு. Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.