துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தஸ்லீம் குணமடைகிறார்... அல்ஹம்துலில்லாஹ் . ( சம்பவ விபரம் இணைப்பு)


மாவனல்லை தனாகமைக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் எம்.ஆர்.எம் தஸ்லீம் அவர்கள்
இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி   தற்போது கண்டி பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்பட்டுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அறிந்ததே..


இச்சம்பவம் தொடர்பாக விஷேட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உளவுப்படையினர் குற்றவாளிகளையும் குற்றத்திற்கான பின்னணியையும் கவனமாக தேடிவருகின்றனர்.

3 பிள்ளைகளின் தந்தையான  சகோதரர் தஸ்லிமை பொருத்தவரை தமது 38 வருட வாழ்க்கையில் சரிபாதி சமூகத்துக்காகவே கொடுத்து இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Farm / தோட்டம் போன்றவற்றை நிர்வகித்து வரும் இவர் பிரதேசத்தில் இடம்பெறும் சமூக விரோத செயல்களுக்கு குறிப்பாக போதைப்பொருள் வர்த்தகத்திக்கு எதிராக செயல்பட்டு வந்ததுடன் அது தொடர்பான தகவல்களை போலீசாருக்கும், இராணுவத்திற்கும் வழங்கி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டின் பின்னர் தலை நிலத்திலும், கால் கட்டிலிலும் இருந்ததாகவும், இரத்தம் பல இடங்களில் காணப்பட்டதாகவும், உம்மா உம்மா என கத்துவதை கண்டு தாயும், மனைவியும் அவரை நோக்கி  ஓடி சென்றதாக தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவர்கள் கத்தும்  ஓசை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தகர்கள் ஓடி வந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவி உள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டின் பின் கதவை திறந்து உள்ளே வந்து சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். பிரதேச CCTV காட்சிகளை போலீசார் பரீட்சித்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தஸ்லீம் குணமடைகிறார்... அல்ஹம்துலில்லாஹ் . ( சம்பவ விபரம் இணைப்பு) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தஸ்லீம் குணமடைகிறார்... அல்ஹம்துலில்லாஹ் . ( சம்பவ விபரம் இணைப்பு) Reviewed by Madawala News on March 11, 2019 Rating: 5