கொழும்பு கோட்டை ரயில்வே நிலையம் முன்னால் இடம்பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம்.


பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு, 3 மாத காலத்தின் நிலுவைத்தொகையை வழங்காமை உள்ளிட் 036 பிரதான காரணங்களை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 நாட்டின் பிரதான நகரங்களில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

நுகேகொட, பதுளை, பண்டாரகம, கண்டி, தங்காலை, புத்தளம், மொனராகலை, வெல்லவாய, மொறவக, ரத்தினபுரி உள்ளிட்ட 20 பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றது.

கொழும்பு கோட்டை ரயில்வே நிலையம் முன்னால் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை படங்களில் காணலாம்.
படங்கள் : அப்துல் முஹைமின்
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையம் முன்னால் இடம்பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம். கொழும்பு கோட்டை ரயில்வே நிலையம் முன்னால் இடம்பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின்  போராட்டம். Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5