மாகந்துர மதூஷின் சகா, 'பெங்கிரிவத்தே சுதா' கைது.


துபாயில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாகந்துர மதூஷின் மற்றுமொரு
சகாவான பெங்கிரிவத்தே சுத்தா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெங்கிரிவத்தே சுத்தா என அழைக்கப்படும் 40 வயதுடைய சமில ரங்கன பெரேரவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நுகேகொட - தெல்கந்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

500 கோடி ரூபா வைரக்கல் கொள்ளையுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார் சந்தேகிப்பதுடன் குறித்த கொள்ளைக்கு பயன்படுத்திய காரொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகந்துர மதூஷின் சகா, 'பெங்கிரிவத்தே சுதா' கைது. மாகந்துர மதூஷின் சகா,  'பெங்கிரிவத்தே சுதா' கைது. Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5