சிங்கள- முஸ்லிம் உறவைப்பேண அக்குறணை தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் முயற்சி.


-ஜே.எம்.ஹபீஸ்-
கடந்த 19 வருடங்களாக மூடப்பட்டிருந்த பூஜாப்பிட்டிய கல்விப் பிரதேசத்திற்குட்பட்ட
வட்டகொட கனிஷ்ட வித்தியாலயம் வட்டகொட மாதிரி ஆரம்பப் பாடசாலை என்ற புதுப் பெயரில் திறந்து வைக்கப்பட்டது.(19.3.2019)


இப்பாடசாலையினை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வளங்ளை அக்குறணை தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் வழங்கியது. அதன் அதிகர் எஸ்.எச்.எம். றியால்தீன் அதற்கான ஏற்பாடுளைச்செய்திருந்தார். 


அதன்படி அப்பாடசாலைக்குத் தேவையான 20 மாணவர் கதிரைகள் அவற்றுக்கான பாலர் மேசைகள், மூன்று ஆசிரியர் மேசைகள், பிளாஸ்டிக் கதிரைகள் சகல மாணவர்களுக்கும் தேவையான புத்தகப் பொதிகளும், விளையாட்டுப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.


அன்றைய தினம் பாடசாலையில்  சேர்த்துக்காள்ளப்பட்ட  மாணவர்களுக்கு பதக்கங்ளையும் தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் வழங்கியது.
மத்திய மாகாண மேலதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் யு டு ஆ ஸாருதீன் அவர்களின் ஆலோனையின்படி மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலய அதிபர் எஸ்.எச்.எம். றியால்தீன் தெரிவித்தார்.

இன ஐக்கிய செயற்பாட்டின் மூலம்
சிங்கள முஸ்லிம் உறவைப்பேண அக்குறணை  தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் மேற்படி வேலைத்திட்டத் மேற்கொண்டதாக அதிபர் எஸ்.எச்.எம். றியால்தீன் தெரிவித்தார்.

 மாகாணக்கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்கா மேற்படி பாடசாலையை திறந்துவைப்பதை மேலே காணலாம்.


சிங்கள- முஸ்லிம் உறவைப்பேண அக்குறணை தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் முயற்சி. சிங்கள- முஸ்லிம் உறவைப்பேண அக்குறணை  தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் முயற்சி. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.