வேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது..


சென்றவாரம்  வேலைக்கு செல்லும் போது  நபர் ஒருவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது ..

கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த 32 வயதுடைய பிரேம ரமணன் என்ற நபரே  கடந்த  5 ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சில மணித்தியாலங்களின் பின்னர்  குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய வேளையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பிரேம ரமணன் , கைது செய்யப்பட்ட  நபரின் நண்பராவார்.

தாம் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் குடும்ப வறுமையினை போக்க தனது மனைவியினை நண்பரிடம் பேசி அவரின் காப்புறுதி  நிறுவனத்திற்கு தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரேம ரமணன் நண்பனின் மனைவியுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார்.

அது மாத்திரமின்றி தகாத உறவில் இருந்த போது பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் என அனைத்தையும் நண்பனின்   கையடக்க தொலைபேசிக்கு அனுப்பியும்  வைத்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் நாட்டிற்கு திரும்பியவுடன் தனது மனைவியிடம் கூறிவிட்டு பிரேம ரமணனை கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான ரமணன்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்தார்.
வேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது.. வேலைக்கு செல்லும் வழியில் ரமணன்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது.. Reviewed by Madawala News on March 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.