கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது. அவர் எமக்கு சவால் இல்லை.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ
போட்டியிடுவது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சவாலில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவரால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுடன் ஒரே சாப்பாடு மேசையில் கோட்டா அமர்ந்திருந்தாலும், மஹிந்தவின் ஆட்சியின் போது, சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சிறந்த எதிர்தரப்பு வேட்பாளர் கோட்டாபயவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது. அவர் எமக்கு சவால் இல்லை. கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது. அவர் எமக்கு சவால் இல்லை. Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.