குற்றவாளியிடம் கத்திக்குத்து வாங்கிய போலிஸ்.


குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பக்மீகொல்ல பகுதியில், கடமையிலிருந்த பொலில்
அதிகாரியொருவர், கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் , குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக நேற்று (17) சென்றிருந்த போதே, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது, கடமைக்குச் சென்றிருந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, சந்தேகநபரை ​மடக்கிப் பிடித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதனையிட்ட  போது, அவரிடமிருந்து வெளிநாட்டில்  உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

பக்மீகொல்ல பகுதியைச் சேர்ந்த, 22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, 
எல்பிட்டி – மண்டகந்த பிரதேசத்தில் ​வைத்து காரொன்றிலிருந்து ஆயுதங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று  (17) குறித்த பகுதியில் வைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது, குறித்த கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதிலிருந்து துப்பாக்கிகள், 3 கைக்குண்டுகள், 2 வாள்கள், 4 முகமூடிகள் மற்றும் கையுறைகள் 2 ஜோடியும் கைப்பற்றபட்டதுடன், அதில் பயணஞ்செய்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.


மேலும் போலி வாகன இலக்க தகடுகள் இரண்டும் குறித்த காரில் காணப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த நபர்கள் அம்பலங்கொடை மற்றும் ஊருகஹ ஆகிய பிரதேசங்களில் கொள்ளையில் ஈடுபடுவதற்காக வருகை தந்ததாக, தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்தனர்.
குற்றவாளியிடம் கத்திக்குத்து வாங்கிய போலிஸ். குற்றவாளியிடம் கத்திக்குத்து வாங்கிய போலிஸ். Reviewed by Madawala News on March 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.