திடீர் மின்சாரத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்.


மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் திடீர் மின்சாரத் தடையால், அரச நிறுவனங்களில் சேவைகளைப்
பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் பல ​அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின் துண்டிப்பை  மேற்கொள்கின்றமையானது சட்டவிரோதமான செயல் என, இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல் மின்துண்டிப்பை மேற்கொள்கின்றமையானது சட்டவிரோதமானதென்றும் அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், இலங்கை மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திடீர் மின்சாரத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்.  திடீர் மின்சாரத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள். Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.