பொள்ளாச்சி விவகாரம்.. தீர்வு இங்கே... உணர்வோர் எங்கே??


நல்லோர் நலமாக வாழ வேண்டுமெனில் தீயோருக்கு குற்றத்துக்கான 

தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை எனும் பெயரில் சிறையில் வைத்து சோறு போடுவதால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனவே அன்றி குறையவில்லை என்பதற்கு இதுபோன்ற கொடுமைகள் கண்முன் சாட்சி. நிதானமாக சிந்திக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒருவர் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை ஆய்வு செய்தால் அதுவே இக்கால கொடுமைகளுக்கு தீர்வு என்பதை புரிந்து கொள்வார்கள்.


எனினும்! அதிகாரவர்க்கம் அதை கொடுமையான தண்டனை, மனிதாபமற்ற தண்டனை என்றெல்லாம் கூறி மறுக்கும். காரணம்! அவ்வாறு மறுத்தால்தான் ஏமாற்று சட்டங்களை நடைமுறையில் வைத்து அப்பாவி மக்களை அனுபவித்து அநியாயம் செய்து கொள்ளையடித்து சொகுசாக வாழலாம்.


இதுபோன்ற அட்டூளியம் நடந்தவுடன் மட்டும் மக்கள் கொந்தளிக்கின்றனர். இவர்களுக்கு மரண தண்டனை கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர். நடுரோட்டில் நிற்க வைத்து சுடனும் என்கின்றனர். இக்கொடுயவர்களது உறுப்பை வெட்டி நாய்க்கு போடனும் என எழுதுகின்றனர். 


இஸ்லாம் இக்கொடுமைக்கு கூறும் தீர்வு இதுதான். குற்றவாளியை மைதானத்தில் நட்டி வைத்து ஏனைய மக்களும் படிப்பினைப் பெறும் வண்ணம் மக்கள் முன்னிலையில் மக்களாலேயே கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை பாதிக்கப் பட்டவர் முன்வந்து மன்னிப்பு வழங்கினால் மாத்திரம் குற்றவாளியை அரசு மன்னிக்கலாம்.


தற்போது நம்நாட்டுச் சட்டங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். எத்துனைப் பெரிய கொடுமை மக்களுக்கு நடந்தாலும் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். தனிப்பட்ட பழிவாங்கல்களை தீர்த்துக் கொள்கிறார்கள். அதுவே குற்றம் செய்தவன் அரசியல்வாதியாகவோ, அரசியல்வாதிக்கு அவசியமானவனாகவோ இருந்தால் குற்றத்தையே மறைத்து விடுகிறார்கள்.


இஸ்லாம் பாதிக்கப் பட்டவர்களுக்கு தீர்மானிக்கும் உரிமையை கொடுக்கிறது. நம் நாட்டுச் சட்டங்களோ பாதிக்கப் பட்டோரை பகடையாக்கி, விளம்பரமாக்கி கொள்ளையர்கள் அரசியல் செய்யவும், இயக்கவாதிகள் இயக்கம் நடத்தவும் சந்தர்ப்பம் வழங்குகிறது.


இதனால் காந்தி ஜீ அவர்கள்கூட இந்தியாவுக்குத்தேவை கலீபா உமரின் ஆட்சி என்றார்.

அபூ ஸுமையா- 12.03.2019
பொள்ளாச்சி விவகாரம்.. தீர்வு இங்கே... உணர்வோர் எங்கே?? பொள்ளாச்சி விவகாரம்.. தீர்வு இங்கே... உணர்வோர் எங்கே?? Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.