நியூசிலாந்து பள்ளிவாயல் துப்பாக்கி சூடு.. ஒரு பெண் உட்பட 4 பேர் கைது


நியூசிலாந்தில், இரண்டு  பள்ளிவாயல்களில்   நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து,
ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகை நேரம் இடம்பெற்ற  இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 இயந்திர துப்பாக்கியுடன் , மிலிட்டரி உடை அணிந்து  வந்த ஒருவன்  அங்கு இருந்தவர்கள் மீது  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். சுமார் 15 நிமிடம் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இதையடுத்து பலர்  ஓடி  உயிர் தப்பினர். இதிலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
இதற்கிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசார ணை நடந்து வருகிறது. ’’இன்னும் இங்கு ஆபத்து ஓய்ந்துவிடவில்லை’’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து பள்ளிவாயல் துப்பாக்கி சூடு.. ஒரு பெண் உட்பட 4 பேர் கைது நியூசிலாந்து பள்ளிவாயல் துப்பாக்கி சூடு.. ஒரு பெண் உட்பட 4 பேர் கைது Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5