ஏறாவூர் வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் கட்டிட நிர்மாணத்திற்கு உதவி கோரல்..


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரஹாத்துஹூஅன்பின் இஸ்லாமிய உறவுகளே ! ..உங்களால் முடிந்த உதவியை எமது உம்மத்திற்கு வழங்க முன் வாருங்கள் ....

ஏறாவூர் தைக்கா வீதியில் உள்ள ஏறாவூர் முஸ்லிம் ஐனாஸா நலன்புரி அமைப்பிற்கு சொந்தமான வாகனம் வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயலில் தரித்து வைக்கப்படுகின்றது

இவ்வாகனம் தனி நபர் ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டதாகும்.  இவ்வாகனத்தின் மூலமாகவே  இலவசமாக முஸ்லிம்களின்  ஜனாசாக்களை மாத்திரம் எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி  உள்ளூர், வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.   இதனால் இவ்வாகனம் எமது சமூகத்திற்கு பாரிய நன்மையாக காணப்படுகிறது.

இவ்வாகனத்தை வெயில், மழை  என்பவற்றில் இருந்து பாதுகாப்பதற்காக  வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் இதற்கான  பொருத்தமான இடத்தை  வழங்கி கராஜ் ஒன்றினை அமைப்பதற்கு  போதுமான  நிதிவளம் இன்மையால் இடை நடுவில் இவ்வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது .

மேலும் , வைசாலையில்  உள்ள  சில  ஜனாஸாக்களை குளிப்பாட்டி , கபனிட்டு கொண்டு செல்லக்கூடிய  சூழ் நிலையும் ஏற்படுவதுண்டு இவ்விடயம்  வைத்திய சாலைகளில் உள்ள பொது  பிரேத அறையிலேயே நடைபெறுகின்றது . 

இதனை  தவிர்க்கும்  முகமாக  வாகன கராஜ்ஜூடன் இணைத்து  ஜானாஸா குளிப்பாட்டும்  அறை  ஒன்றினையும்  அமைக்க  ஜந்து லட்சம் அளவில் தேவைப்படுகிறது  முடியுமா  சகோதரர்கள்  சமூகத்தின்  நன்மை  கருதி ஸதாக்கத்துல் ஜாரியா  என்ற  அடிப்படையில்  உதவ  முன் வாருங்கள் .
வங்கி விபரம்.


நிருவாகம்
வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல்
ஏறாவூர்  0775392419

ஏறாவூர் வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் கட்டிட நிர்மாணத்திற்கு உதவி கோரல்.. ஏறாவூர் வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் கட்டிட நிர்மாணத்திற்கு  உதவி கோரல்..  Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.