' பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..' கையெழுத்து இல்லாமல் மோடியின் வாழ்த்து செய்தி.


பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, இந்திய  பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த வாழ்த்துக்கடிதத்தில், தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில்,ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி அனுப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். மேலும், மோடியின் வாழ்த்துச்செய்தியை வரவேற்பதாகவும், இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண  விரிவான ஆலோசனை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளதாகவும்  தனது டுவிட்டில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா தூதரக உறவுகள் வைத்துள்ள நாடுகளின் தேசிய தினத்திற்கு, நாட்டின் பிரதமர் வாழ்த்துச்செய்தி அனுப்புவது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில்தான் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி, வழக்கமான வாழ்த்துச்செய்தியை அனுப்பியதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட வாழ்த்துச்செய்தியில், பிரதமர் மோடி 'டவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
' பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..' கையெழுத்து இல்லாமல் மோடியின் வாழ்த்து செய்தி. ' பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..' கையெழுத்து  இல்லாமல் மோடியின் வாழ்த்து செய்தி. Reviewed by Madawala News on March 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.