சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று நான் குறிப்பிட்டதாக பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள்.


நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால பயங்கர யுத்தத்தினை வெற்றிக்கொண்டதைத் தொடர்ந்தே
நான் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கொடூரமானவனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் ஏனைய கட்சிகளினாலும் சித்தரிக்கப்பட்டேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கட்சிகளினாலேயே நான் தமிழ் மக்கள் மத்தியில் கொடூரமானவனாக சித்திரிக்கப்பட்டேன்.

இதில் எவ்வித பொது நோக்கமும் இல்லை, முற்றிலும் அரசியல் நோக்கங்களை மையப்படுத்தி அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.

அதற்காகவே என்னை ஒரு தீவிரவாத போக்கு கொண்டவனாக தொடர்ந்து காண்பிக்கின்றனர். நான் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல, அதற்கான அவசியமும் இல்லை.

2015ஆம் அண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் தமிழ் மக்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். இக் கருத்தானது மிகவும் தவறானது நகர் பிரதேசத்தின் சிங்கள இனத்தவர்களின் ஆதரவு எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

பாரியளவிலான வாக்குகளினால் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை, குறுகிய அளவிலான வாக்குகளே கடந்த அரசாங்கத்திற்கு எதிராக கிடைக்கப்பெற்றது.

சிறுபான்மை  மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று நான் குறிப்பிட்டதாக பொய்யான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. இந்நிலைப்பாட்டினை அனைவரும் திருத்திக்கொள்ள வேண்டும்.


ஒரு நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவுடனேயே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்படவேண்டும் என்ற கொள்கையினை எமது அரசியல் செயற்பாடாக முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று நான் குறிப்பிட்டதாக பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள். சிறுபான்மை  மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று நான் குறிப்பிட்டதாக பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள். Reviewed by Madawala News on March 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.