ஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்.

Image may contain: 5 people, text
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையின் கடந்த
ஆட்சிக் காலத்தின்போது மாகாண சபையினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டமே “Integrated Road Investment Programme” எனப்படும் “ஐ ரோட் (I Road)” வேலைத் திட்டமாகும்.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட வீதிகளை காபெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்குரிய அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கமைவாக குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீதிகளைத் தெரிவு செய்வது தொடர்பான கூட்டம் கடந்த 10.05.2016ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலத்தில் நடைபெற்றது.

இதன் போது, காத்தான்குடி பிரதேசம் உட்பட அதன் அயல் கிராமங்களின் வீதிகளை உள்வாங்கும் விடயத்தில் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் வீதிகளை ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவு செய்திருந்தார்.

இதற்கமைவாக கடந்த 18.05.2016ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட BT/RACLG/IRP/2016 இலக்க கடிதத்திற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட வீதிகள் அனைத்தும் ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது.

இதன் பிரகாரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த 20.03.2017ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதம உதவிச்செயலாளர் V. மகேந்திரராஜா அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட EP/08/PL/I Road/2017 இலக்க கடித்திற்கமைவாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஐ ரோட் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இத்தகையதொரு நிலையில், ஒருசில அரசியல்வாதிகள் தங்களுக்கு எத்தகைய சம்பந்தமுமில்லாத, முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஐ ரோட் வேலைத் திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவதும், பொய்யான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுவதுமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே, போலியான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற இத்தகைய அரசியல் கலாசாரம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இத்திட்டத்திற்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் இது கிழக்கு மாகாணம் ரீதியாக செயற்படுத்தப்படும் திட்டம் என்பதைகூட அறிந்திராதவர்கள் காத்தான்குடிக்கு என்னுடைய அழுத்தத்தால் “ஐ ரோட்
(I Road)” திட்டம் அமுலாக்கப்படப்போகின்றது என்று சிறுபிள்ளைதனமாக முகப்புத்ததகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றார்கள் இதற்கான மறுப்பினை ஆதாரபூர்வமாக கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களினூடாகவும், ஆவணங்களினூடாகவும் காணொளியினூடாகவும் காணமுடியும்.


Image may contain: 3 people, people sitting and text
Image may contain: 1 person, sitting
No photo description available.
Image may contain: 4 people, people sitting and text
No photo description available.
No photo description available.
No photo description available.



ஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும். ஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும். Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.