கண்டி வன்செயல் நட்டஈடு கொடுப்பனவில் பிரச்சினை உள்ளோர் இது வரை ஸ்ரீலங்கா மனித உரிமை அரச ஆணைக்குழுவிற்கு எதுவித முறைப்பாடும் விடுக்கவில்லை .


-ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி வன்செயல் நட்டஈடு கொடுப்பனவில் பிரச்சினை உள்ளோர் இது வரை ஸ்ரீலங்கா மனித
உரிமை அரச ஆணைக்குழுவிற்கு  எதுவித முறைப்பாடும் விடுக்கவில்லை என  இனமத நல்லிணக்கத்திற்கான திகன கருத்தாடல் அரங்கில் வைத்து மேற்படி ஆணைக்குழு இணைப்பானர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்தார். (13.3.2109)


கண்டி கெண்டியன் ஆர்ட் மண்டபத்தில் இடம் பெற்ற 'சமாதானம்' அமைப்பு நடத்தி ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.


2018ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டிப் பிரதேசத்தில் திகனை, தெல்தெனிய, பலகொல்ல முதலான இடங்கள் உற்பட பல்வேறு இடங்களில்  இடம் பெற்ற வன் செயல் தொடர்பாக இது வரை பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் அரசு சார்பான ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, மற்றும் சர்வமத அமைப்புக்கள் உற்பட 16 நிறுவனங்கள் தமது அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.


 அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டு புத்தக வடிவில் வெளியிடுவதுடன் அரச தலைவர்கள், சர்வ கட்சித்தலைவர்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் முதலான பல தரப்பட்ட பொறுப்பு தாரிகளுக்கு கையளிப்பது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதுடன் அது தொடர்பாக ஊடக தெளிவு படுத்தல் ஒன்று இடம் பெற்றது.


'திகன போரம்' என்ற தலைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 'இனமத நல்லிணக்கத்திற்கான திகன கருத்ததாடல் அரங்கு' எனப் பெரிடப்பட்டிருந்தது. இதற்கான அனுசரணையை யூஎஸ் எய்ட்ஸ் நிறுவனம் வழங்கி இருந்தது.
திருமதி குமுதினி விதானகே மேலும் தெரிவித்ததாவது -


நட்ட ஈடுகொடுப்பனவு தொடர்பாக  ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்வில்லை என்பதால் அது தொடர்பாக மேலதிமாகத் தேடிப்பார்க்க வில்லை என்றும் எனவே நட்டஈடு கொடுப்னவு பற்றி பிரச்சினைகள் இருக்குமாயின் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்டக் காரியாலயத்திற்கு உடன் முறையிடலாம். இது ஒரு அரச நிறுவனம். எனவே அதற்குள்ள பொறுப்புக்களை அது நிறைவேற்றும் என்றும் கூறினார்.


கண்டி வன்செயல் நட்டஈடு கொடுப்பனவில் பிரச்சினை உள்ளோர் இது வரை ஸ்ரீலங்கா மனித உரிமை அரச ஆணைக்குழுவிற்கு எதுவித முறைப்பாடும் விடுக்கவில்லை . கண்டி வன்செயல் நட்டஈடு கொடுப்பனவில் பிரச்சினை உள்ளோர் இது வரை ஸ்ரீலங்கா மனித உரிமை அரச ஆணைக்குழுவிற்கு  எதுவித முறைப்பாடும் விடுக்கவில்லை . Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.