இன்று இலங்கையில் அதிக வெப்பம் .


நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை
நிலவும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது குறித்து, மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிகநீரைப் பருகுமாறும் நிழலான இடங்களில் இளைப்பாறுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று இலங்கையில் அதிக வெப்பம் . இன்று இலங்கையில்  அதிக வெப்பம் . Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.