கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச மகளிர் கல்லூரியின் மாணவத்தலைவிகளிற்கான சின்னம் சூட்டும் விழா.

கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச மகளிர்  கல்லூரியின் மாணவத்தலைவிகளிற்கான
சின்னம் சூட்டும் விழா கல்லூரி அதிபர் ஜனாப் ஏ.ஏ.எம்.ஜாஸில் தலைமையில்  14/03/2019 வியாக்கிழமை  காலை 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இதில் பிரதம அதிதியாக பொறியியளாளர் திருமதி எம்.எம்.நூருல் முனவ்வரா உவைஸ் (பிரதி பொது முகாமையாளர், இலங்கை மின்சார சபை , கண்டி) கலந்து கொண்டார். இவர் பல்வேறு தலைமைத்துவ நிகழ்ச்சிகளை நடாத்தும் ஒரு திறமையான பெண்மனி ஆவார். மேலும் இவர் ஒரு டோஸ்ட்மாஸ்டரும் (Toastmaster) ஆவார்.  


இவர் தனது உரையிலே முஸ்லிம் பெண்கள் கல்வியிலும், தலைமைத்துவத்திலும் பின்வாங்கக் கூடாது என்றும் தனது சமூகத்திற்கும்,தாய்நாட்டிற்கும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.மேலும் தலைமைத்துவ பயிற்சிகளிற்காக பல்வேறு  நாடுகளுக்கு பிரயாணம் செய்துகொண்டிருக்கும் இவர் தனது இன்றைய நிலையை அடைவதற்கு கடினமாக உழைத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
மாணவத்தலைவிகள் தமது பெற்றோர் முன்னிலையில் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையிலிருந்து ஹில்கன்ட்றி மகளிர் கல்லூரி  இவ்வருடம் முதல் வேறபடுத்தப்பட்டதை பெற்றோர்களும் , ஊர்மக்களும் பாராட்டினர். 


கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச மகளிர் கல்லூரியின் மாணவத்தலைவிகளிற்கான சின்னம் சூட்டும் விழா. கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச மகளிர் கல்லூரியின் மாணவத்தலைவிகளிற்கான சின்னம் சூட்டும் விழா. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5