கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவர்கள்.


கண்டி,மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலை மாணவி அப்ரா நாபில் மற்றும்  மாணவன்
எஸ்.ஏ.எம்.ஒமர் ஆகியோர் க.பொ.த (சா/த) 2018 பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளனர். "அல்ஹம்துலில்லாஹ்"


  அப்ரா நாபில் 8 பாடங்களில் A தரத்துடனும்  ஒரு பாடத்தில் B தரத்துடனும் ,

எஸ்.ஏ.எம்.ஒமர் 7 பாடங்களில் A தரத்துடனும் இரு பாடங்களில் B தரத்துடனும் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளனர்.


இது தொடர்பில் கல்லூரி முதல்வர் அதிபர் A.A.M ஜாஸில் கருத்து தெரிவிக்கையில் :- எமது கல்லூரியில் சென்ற வருடம் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 90% வீதமான மாணவிகளும் 71% வீதமான மாணவர்களும்  சிறந்த பெறுபேறுகளை பெற்று  எமது கல்லூரிக்கு பெருமை தேடித்தந்திருக்கின்றார்கள். மேலும் ஹில்கன்ட்ரி மகளிர் கல்லூரி வேறுபடுத்தப்பட்ட காரணத்தினால் எதிர்காலத்தில் இதைவிட சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.


 இந்த பெறுபேறுகளுக்கு உழைத்த பாடசாலை நிர்வாகக் குழு,பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ,  மாணவிகள்  அனைவருக்கும் எமது கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவர்கள். கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவர்கள். Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.