தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தினார் முன்னாள் அமைச்சர் சுபையிர்

செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தின் ஊடாக உறுகாமம் பிரதேசத்தில் 50 வீடுகள் நிர்மாணம்
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செமட்ட செவண (அனைவருக்கும் நிழல்) வீடமைப்பு திட்டத்தின் கீழ் ஏறாவூர் பற்று, புதூர் உறுகாமம் பிரதேசத்தில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (30) புதூர் உறுகாமம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மஹ்றூப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபையிர் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார், இதன்போது, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், வடிச்சல் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தின் கீழ் ஏறாவூர், ஸம் ஸம் மற்றும் ஸகாத் கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிப்பதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஏறாவூர் பிரதேசத்திற்கு வருகை தந்த போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உறுகாமம் மற்றும் வடிச்சல் ஆகிய பிரதேசத்திலும் குறித்த வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் சுபையிர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தின் ஊடாக மேற்குறித்த இரு கிராமங்களிலும் வீடுகளை நிர்மாணித்து அப்பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதன் ஊடாக எதிர்காலத்தில் அம்மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ முடியும் என்பதனையும் அவர் அமைச்சர் சஜித்திடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிரின் மேற்படி கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ வடிச்சல் கிராமத்திற்கு 50வீடுகளையும், உறுகாமம் கிராமத்திற்கு 75வீடுகளையும் குறித்த திட்டத்தினூடாக வழங்குவதாக உறுதியளித்தார். அதற்கினங்க, வடிச்சல் கிராமத்தில் 31வீடுகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்து, பாதிக்கபபட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ விசேட கவனம் செலுத்தி வருகின்றார். அதற்கினங்க தனது அமைச்சின் ஊடாக, செமட்ட செவண (அனைவருக்கும் நிழல்) திட்டத்தின் கீழ் தேசிய ரீதியாக நூற்றுக்கும் அதிகமான மாதிக் கிராமங்களை உருவாக்கி வருகிறார்.

கடந்த யுத்த காலத்தின் போது பாதிக்கப்பட்டு தமது உயிர், உடமைகளை இழந்து வெளியேறிய வடிச்சர் மற்றும் உறுகாமம் கிராம மக்களை மீண்டும் அவர்களது சொந்த நிலங்களில் குடியமத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தினார் முன்னாள் அமைச்சர் சுபையிர் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தினார் முன்னாள் அமைச்சர் சுபையிர் Reviewed by Madawala News on March 30, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.