கஞ்சிபான இம்ரானிடம் CID தீவிர விசாரணை !துபாயில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட
‘கஞ்சிப்பானை இம்ரான்’ என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் உள்ளிட்ட நால்வர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் இம்ரானிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக செயலகம் தெரிவித்துள்ளது.

இன்று (28ஆம் திகதி) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டவரான கஞ்சிப்பானை இம்ரான் துபாயில் தலைமறைவாகியிருந்ததாகவும், அவர் தன்னுடைய உதவியாளர்களைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கஞ்சிபான இம்ரானிடம் CID தவிர CCD , STF , ஓர்கனைஸ்ட் கிரைம் டிவிஷன் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகள் விசாரிக்கப்படவுள்ளார்.
கஞ்சிபான இம்ரானிடம் CID தீவிர விசாரணை ! கஞ்சிபான இம்ரானிடம் CID தீவிர விசாரணை ! Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.