அல் இக்றா வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்ட மாண­வர்கள் 18 தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில்..
மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள பூநொச்­சி­முனை அல் இக்றா வித்­தி­யா­ல­யத்தில்
ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்ட மாண­வர்கள் 18 பேர் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நேற்று அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக பொலிசார் தெரி­வித்­தனர்.

மட்­டக்­க­ளப்பு கல்வி வவ­ல­யத்தின் காத்­தான்­குடி கல்விக் கோட்­டத்­தி­லுள்ள  பூநொச்­சி­முனை அல் –இக்றா வித்­தி­யா­ல­யத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்­கின்ற மாண­வர்கள் மீது வகுப்­பா­சி­ரியர் மிகக் கடு­மை­யாக தாக்­குதல் நடாத்­தி­யுள்ளார். குறித்த ஆசி­ரியர் கையி­னாலும் தடி­யி­னாலும் மிகவும் கடு­மை­யாக தம்மை தாக்­கி­ய­தாக மாண­வர்கள் தெரி­விக்­கின்­றனர். இதனால் பாதிக்­கப்­பட்ட 18  மாண­வர்கள் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

பாட­சா­லையின் ஏனைய ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றார்­களின் உத­வி­யுடன் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு வருகை தந்த மாண­வர்­க­ளுக்கு ஆரம்­ப கட்ட சிகிச்­சை­களை மேற் கொண்­டுள்­ள­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர்.

மாண­வர்­களை தாக்­கிய குறித்த ஆசி­ரி­யரை காத்­தான்­குடி பொலிசார் கைது செய்­துள்­ள­துடன் மேல­திக விசா­ர­ணை­க­ளையும் மேற் கொண்டு வரு­கின்­றனர்.

குறித்த ஆசி­ரி­யரின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தாம் ஏலவே கல்வித் திணைக்­க­ளத்தில் முறை­யிட்­டி­ருந்­த­துடன் இவரை இட­மாற்­று­மாறு பல முறை அதி­கா­ரி­களை கேட்­ட­தா­கவும் குறித்த ஆசி­ரியர் மாண­வர்கள் மீது மிகவும் கடு­மை­யாக  தாக்­குதல் நடாத்­தி­யுள்­ள­தா­கவும் இப்­பா­ட­சாலை அதிபர் ஏ.பி.அப்துர் ரசூல் தெரி­வித்தார்.

இதே­வேளை இது தொடர்­பாக தனக்கு கிடைத்த முறைப்­பாட்­ட­டை­ய­டுத்து மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வலய அலு­வ­ல­கத்­துக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்ற நடவடிக்கை எடுத்து வருவதுடன் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
-Vidivelli
அல் இக்றா வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்ட மாண­வர்கள் 18 தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில்.. அல் இக்றா வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்ட மாண­வர்கள் 18 தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில்.. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.