எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் கருத்துக்கள் வேடிக்கையானவை அமைச்சர் எம். எச் ஏ. ஹலீம்
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கண்டி -கொழும்பு அதிவேக
நெடுஞ்சாலையை மறந்துவிட்டு தற்போது ஒரு மாதத்தில் நிர்மாணித்து திறந்து வைப்போம் என்று கூறுவது வேடிக்கையானது என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச் ஏ. ஹலீம் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் 200 வீதிகள் மற்றும் பாலங்கள் மக்களின் பாவனைக்காக கையளிக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் 198 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூஜாப்பிட்டிய , தொடம்தென்ன , போதொட அன்தரகம , பட்டியாவத்த ஊடாக ரஜபில்ல செல்லும் காபட் வீதியை திறந்து வைக்கும் வைபம் பூஜாப்பிட்டிய நகரில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இவ்வாறு தெரிவித்தார்..

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஆட்களைச் சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள் கண்டியில் கூட்டத்தை கூட்டினர். சனங்கள் வராமமையினால் ஏமாற்றத்தை அடைந்தனர். பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் கொழும்பு-கண்டி வீதியை ஒரு மாதத்தில் முடித்து திறந்து தவருவதாக கூறினார். 

அவர் ஜனாதிபதியாக எத்தனை வருடம் இருந்தார் என்பதை மறந்து விட்டார். அக் கால கட்டத்தில் இந்தப் பாதையைப் பற்றி மறந்து விட்டார். அவருக்கு அதிக நினைப்புக்கள் இருந்ததெல்லாம் ஹம்பாந்தோட்டை மாத்திரம் தான். அவசியமற்ற பிரதேசத்தில் அதனைச் செய்தார். அதனால் மக்களுக்கு ஒரு பிரயோசனம் இல்லை. இதனால் பாரிய நஷ்டங்களே ஏற்பட்டன. இதுதான் உண்மை.

கடந்த காலத்தில் இந்த அரசாங்கத்திடம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் பௌத்த சமயத்திற்கு முக்கிய இடம் இல்லை. பௌத்த சமயத்துக்கு முக்கிய கௌரவம் இல்லை என பாரிய பொய்களை பரப்பினார். எங்கள் அரசாங்கமோ அல்லது எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அப்படியானதொரு பிழைகளைச் செய்பவர்கள் அல்லர். 

சிங்கள, தமிழ், முஸ்லிம்,கிறிஸ்தவர்கள் ஆகிய பல்லின மக்கள் வாழும் நாடு என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அதில் பெரும்பான்மையின மக்கள் சிங்கள மக்கள் ஆவர். அவர் கூறுவது போன்று பொய்யான விடயங்கள் இடம்பெறவும் இல்லை. அப்படியொன்று இல்லாமல் அபாண்டமான பொய்களை பரப்பினார் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் கருத்துக்கள் வேடிக்கையானவை அமைச்சர் எம். எச் ஏ. ஹலீம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின்  கருத்துக்கள் வேடிக்கையானவை அமைச்சர் எம். எச் ஏ. ஹலீம் Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.