கூட்டமைப்புடனான பேச்சையடுத்து கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு! - Madawala News Number 1 Tamil website from Srilanka

கூட்டமைப்புடனான பேச்சையடுத்து கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு!
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய
நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதியைப் பணித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வரும் கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் குறித்தே இந்தப் பேச்சில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

கேப்பாப்பிலவு மக்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக உள்ளது எனக் கூட்டமைப்புக் குழுவினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

இதன்போது, கூட்டமைப்பினர் முன்னிலையில் இராணுவத் தளபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

மாற்றுக் காணிகள் இல்லாமை காரணமாக அந்த முகாமை வேறு இடத்துக்கு நகர்த்த முடியாதுள்ளதாக ஜனாதிபதிக்கு இராணுவத் தளபதி பதிலளித்தார்.

ஆயினும், அருகில் பல அரச காணிகள் உள்ள போதும் மக் களின் காணிகளை விடுவிக்க இராணுவம் பின்னடிக்கிறது என ஜனாதிபதியிடம் விடயத்தை விளக்கினர் கூட்டமைப்பின் எம்.பிக்கள்.

இதனையடுத்து மீண்டும் இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, உடனடியாக கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார் என அறியமுடிந்தது. 
கூட்டமைப்புடனான பேச்சையடுத்து கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு! கூட்டமைப்புடனான பேச்சையடுத்து  கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு! Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5