இலங்கை கடற்படையுடன் பாரிய கூட்டுப்பயிற்சி !! 1000 அவுஸ்ரேலிய படையினர் மற்றும் போர் கப்பல்கள் இலங்கை வருகை ..அவுஸ்ரேலிய – இலங்கைக் கடற்படையினருக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கடற்படைக் கூட்டுப்பயிற்சிக்காக அவுஸ்ரேலிய படையினர் இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதித் தூதுவர் ஜோன் பிலிப் குறிப்பிட்டுள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) அவுஸ்ரேலியத் தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கைக் கடற்படையுடன் பாரிய கூட்டுப்பயிற்சிகளில் பங்கேற்பதற்காக 1000 அவுஸ்ரேலியப் படையினரும்இ நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன.


'இந்தோ – பசுபிக் முயற்சி – 2019' என்ற பெயரிலான இந்தக் கூட்டுப்பயிற்சியில் அவுஸ்ரேலியாவின் இராணுவத்தினர் விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் பங்கேற்கின்றனர். அவுஸ்ரேலிய கடற்படையின் கூட்டுச் செயலணியைச் சேர்ந்த கன்பெரா, நியூகாசில் ,பராமட்டா, சக்சஸ், ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளன


விமானம் மூலம் தரையிறக்கப்படும் பயிற்சி சுழியோடும் பயிற்சி மற்றும் வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்யும் நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் இதன்போது மேற்கொள்ளப்படும்' என அவுஸ்ரேலிய பிரதித் தூதுவர் ஜோன் பிலிப் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்படையுடன் பாரிய கூட்டுப்பயிற்சி !! 1000 அவுஸ்ரேலிய படையினர் மற்றும் போர் கப்பல்கள் இலங்கை வருகை .. இலங்கை கடற்படையுடன் பாரிய கூட்டுப்பயிற்சி !! 1000 அவுஸ்ரேலிய படையினர் மற்றும் போர் கப்பல்கள் இலங்கை வருகை .. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5